For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் சூறாவளியில் ஸ்டாலினுடன் தென்றலாய் சென்ற துர்கா…

By Mayura Akilan
|

சென்னை: அனல் காற்று... மண்டையை பிளக்கும் வெயில்... என எதைப்பற்றியும் கவலைப்படாமல் அரசியல் தலைவர்களின் வருகைக்காக காத்திருந்த மக்கள்...

மக்கள் கூட்டத்தை பார்த்த உடன் உற்சாகமாக மைக் பிடித்த அரசியல் தலைவர்கள் என கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அலைந்து திரிந்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் 40 லோக்சபா தொகுதிகளுக்கும் 8109 கிலோமீட்டர் தூரம் சாலை வழியே பிரசாரம் செய்துள்ளார். அனல் பிரச்சாரத்தில் அவருடன் கூடவே சென்றது ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்.

பிரசாரத்தில் கணவரின் பேச்சை ஆர்வமாய் கேட்டு ரசிப்பதோடு மட்டுமல்லாது அவருக்கு நேரத்திற்கு சரியான உணவு கொடுத்து சாப்பிட வைப்பது என கவனித்துக் கொண்டாராம் மனைவி துர்கா. தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார் படியுங்களேன்.

தண்ணி கூட குடிக்கமாட்டாக…

தண்ணி கூட குடிக்கமாட்டாக…

கூட்டத்தை பார்த்த உடன் உற்சாகத்தில் பேச ஆரம்பித்தால் ஸ்டாலின் தண்ணீர் குடிக்க கூட மறந்து விடுவாராம். தண்ணீர் குடிக்காவிட்டால்தான் சிக்கல் என்று கூறி வெயிலுக்கு இதமாக இளநீர் குடிக்க கொடுப்பாராம் துர்கா.

கொஞ்சம் ஸ்நாக்ஸ்….

கொஞ்சம் ஸ்நாக்ஸ்….

தனது கணவர் பிரசார பயணத்தின் போது காலையில் ஒரு இட்லி, ஒரு தோசை, மதியம் ஒரு கப் சாதம், கொஞ்சம் காய்கறி மட்டுமே சாப்பிடுவார். மாலையில் 2 பிஸ்கட் அல்லது ஒரு முறுக்கு, இரவில் 2 இட்லி மட்டுமே என்கிறார் துர்கா.

தொண்டை கட்டிப்போச்சே

தொண்டை கட்டிப்போச்சே

பிரசாரம் தொடங்கிய 4 வது நாளிலேயே தொண்டை கட்டிக்கொண்டது. அதற்கு சீரகத் தண்ணீர் கொடுத்து தொண்டையை சரி செய்தேன் என்கிறார் துர்கா.

குடை பிடிக்க விட மாட்டார்

குடை பிடிக்க விட மாட்டார்

என்னதான் வெயிலடித்தாலும் தொண்டர்களை பார்த்த உடன் பேச ஆரம்பித்து விடுவார். குடையாவது பிடிக்கச் சொல்லவா என்று கேட்டால் மறுத்துவிடுவார். மயக்கம் வந்துவிடும் என்று எச்சரித்த பின்னரே குடை பிடிக்க சம்மதம் கூறியுள்ளார் ஸ்டாலின்.

ஆலய தரிசனம்

ஆலய தரிசனம்

ஸ்டாலின் பிரசாரத்திற்கு போகும் இடமெங்கும் அங்குள்ள முக்கிய ஆலயங்களை தரிசிக்க துர்கா தவறுவதில்லை. திருவண்ணாமலை, நாமக்கல் போன்ற இடங்களில் நெய்விளக்கேற்றியும் வழிபட்டார் துர்கா.

மோடி, லேடி, டாடி

மோடி, லேடி, டாடி

8109 கிலோமீட்டர் பிரசார பயணத்தின் போது கூடவே சென்ற துர்கா ஸ்டாலின் தொண்டர்களிடையை நிறைவாக புதுக்கோட்டையில் பேசினார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ‘மோடி'யாலோ, ‘லேடி'யாலோ அல்ல என் ‘டாடி'யால்தான் என்று கூறியதுதான் அன்றைய பேச்சின் ஹைலைட். அன்றைய தினம் கணவரின் பேச்சினை அதிகமாகவே ரசித்துக் கேட்டார் துர்கா.

அனல்காற்றில் தென்றலாய்

அனல்காற்றில் தென்றலாய்

அனல் காற்றினூடே சூட்டை கிளப்பிய பிரச்சாரத்தில் தென்றலாய் துர்கா உடன் சென்றதால் 8109 கிலோமீட்டர் எளிதாய் ஸ்டாலின் பயணிக்க முடிந்தது என்கின்றனர் திமுகவினர்.

English summary
Soft power was in evidence in some choice Lok Sabha constituencies in the State with family members of leading politicians doing a quiet door-to-door campaign. Mr. Stalin’s wife, Durga has been visiting temples to seek blessings for the party candidates besides accompanying her husband during the campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X