For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 நாட்களுக்குள் நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட வேண்டும்... கட்சிகளுக்கு லக்கானி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கட்சிகள் தங்களது கட்சி சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை, வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நாளில் இருந்து 7 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சமயங்களில் அனைத்து வேட்பாளர்களும், கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் செய்த போதும், ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்களாக சிலர் களமிறக்கப்படுவது வழக்கம்.

Star speakers list should be given with in one week

அந்தவகையில் இம்முறை பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பற்றிய விவரத்தை, வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 77 உட்பிரிவு(1)-ன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரோ அல்லது அவருடைய ஏஜெண்டோ தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் முடியும் வரை செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வங்கி கணக்கு மூலமே செய்யப்பட வேண்டும்.

அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்காக விமானம் மற்றும் வாகனங்களில் பயணம் செய்யும்போது அதற்கான செலவு கட்சி செலவு கணக்கில் சேர்க்கப்படும். மேலும் ஒரு வேட்பாளருக்காக பிரசாரம் செய்யும்போதும் அந்த அரசியல் கட்சித் தலைவருக்கான செலவு வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும்.

ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 77 உட்பிரிவு 1(ஏ)-ன்படி ‘நட்சத்திர பேச்சாளர்' என்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அனுமதியை பெற்ற தலைவர்களின் தேர்தல் பிரசார செலவுகள் அனைத்தும் கட்சியின் தேர்தல் செலவு கணக்கிலோ, வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கிலோ சேர்க்கப்படாது. அதற்கு விதிவிலக்கு உண்டு.

எனவே தங்கள் கட்சியின் சார்பில் யார்-யாரை நட்சத்திர பேச்சாளர்களாக (அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் 40 பேரும், அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தால் 20 பேரும்) அறிவிக்கப்பட உள்ளனர் என்ற விவரங்களை வேட்பு மனு தாக்கல் தினமான வருகிற 22-ந்தேதி முதல் 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். நட்சத்திர பேச்சாளரின் பெயர் மற்றும் விவரங்களை இந்திய தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு அரசியல் கட்சியினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு நட்சத்திர பேச்சாளர் பயணம் செய்யும் வாகனங்களின் பதிவு எண்கள் தேவையில்லை' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Tamilnadu chief Electoral officer Rajesh Lakhoni has instructed all the political part leaders to submit the list of star speakers with in 29th of this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X