For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாற்காலி சண்டையில் விவசாயிகளை தமிழக அரசு மறந்துவிட்டது - குஷ்பு சாடல்! - வீடியோ

தமிழக அரசு நாற்காலி சண்டை போட்டுக்கொண்டிருப்பதால் விவசாயிகளின் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளவில்லை என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளார் குஷ்பு சாடியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: நாற்காலிக்கு சண்டை போட்டுக்கொண்டிருக்கும் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டுகொள்வதில்லை. இவர்களுக்குத் தேவை பணம் சம்பாதிப்பதுதான் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:

State government neglecting farmers' issue said kushbu

தமிழ்நாட்டில் அதிமுகவின் இரு கோஷ்டியினரும் நாற்காலியை யார் கைப்பற்றுவது, அதை யார் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது என்ற போட்டியில்தான் உள்ளனர். டெல்லியில் விவசாயிகள் 40 நாட்களாகப் போராடி வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு நேரம் இல்லை.

கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில்தான் ஆர்வம் காட்டி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் மனநிலையில் இல்லை.

வங்கதேச நாட்டுக்கு நிதி அள்ளிக்கொடுக்கிறார்கள். ஆனால் தமிழக விவசாயிகளின் பிரச்சனையை கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

English summary
In Madurai airport congress spokeperson kushbu told that State government neglecting farmers' issue and concentrating on their own problems and central government not even ready to hear farmers' problem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X