For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஆளும் கட்சியினரின் தலையீட்டினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று திமுக
தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 இலட்சம் பேரை, நிவாரணப் பட்டியலிலே இருந்து நீக்குவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.முகாம் நடத்துவதுபோல் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு விவரங்களைச் சேகரித்தனர். கணக்கெடுக்கச் செல்லும் அரசு ஊழியர்களை ஆளுங்கட்சிக் கவுன்சிலர்களும் பிரமுகர்களும் கையில் வைத்துக் கொண்டு, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க வற்புறுத்தியதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கணக்கெடுக்கச் சென்ற ஊழியர்கள், பெரும்பாலான இடங்களில் மக்களிடம் வங்கிக் கணக்கு ஆவணங்கள், முகவரி ஆவணங்களைக் கூட முறையாக வாங்காமல் அவசர கதியில் வந்து சென்றனர்.

statement issued by karunanidhi

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:

கேள்வி :- வெள்ளம் வந்து பல வகை இழப்புகளுக்குக் காரணமாக இருந்த அ.தி.மு.க. அரசு, வெள்ள நிவாரணப் பணிகளையாவது முறையாகச் செய்கிறதா?

பதில் :- வெள்ளம் வடிந்து ஒரு மாதமாகிறது. பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய பட்டியல் முறையாகத் தயாரிக்கப்படவில்லை. காரணம், ஆளுங்கட்சியினரின் தலையீடு. ஆளுங் கட்சியினர் எடுத்துத் தரும் பட்டியலை அதிகாரிகள் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறார் களாம். நிவாரணப் பணிகள் முறையாக நடைபெற வில்லை. நிவாரண நிதி பாகுபாடின்றி வழங்கப்பட வில்லை. சென்னை மாநகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 இலட்சம் பேரை, நிவாரணப் பட்டியலிலே இருந்து நீக்குவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆறு மாவட்டங்களில் 30 லட்சம் குடும்பங்கள் தான் பாதிக்கப்பட்டன என்று அறிவித்திருப்பது சரியான கணக்காகத் தெரியவில்லை. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட் டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக் கும் உரிய நிவாரணம் தரப்பட்டாக வேண்டும். பயிரி ழப்பால் பாதிப்புக் குள்ளாகியிருக்கும் விவசாயிகள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, பெரும் வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு குறுந்தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் இழப்பினையும் ஈடுகட்டும் வகையில் நிவாரண உதவி அரசின் சார்பில் தரப்பட வேண்டும்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெள்ள நிவாரணம் வழங்கியதில் பெரும் முறைகேடு நடந் துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள் ளனர். ஒரே குடும்பத்தில் 3 முதல் 4 பேரின் வங்கிக் கணக்கில் நிவாரணப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள தாகவும், அவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சம் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டது. ஆனால் யானைப் பசிக்கு சோளப் பொறி தான் என்பதைப் போல, வெள்ள நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் மட்டுமே அரசு அறிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதற்கான கணக்கெடுப்பு பணியும் தொடங்கியது.

சென்னையில் மட்டும் 3,250 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். கடந்த 2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி சென்னையில் சுமார் 11 லட்சம் குடும்பங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாவட்டம் அதிக மக்கள் தொகை கொண்டது என்பதால் கணக்கெடுப்பு நடத்த குறைந்தபட்சம் ஒரு மாதமாவது அவகாசம் வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் தேர்தல் நெருங்கி வருவதால் 10 நாட்களுக்குள் கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு வாய்மொழி உத்தரவிட்டது. இதனால் ஊழியர்கள் அவசர, அவசரமாக கணக்கெடுப்பு நடத்தினர். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல, அவசரக் கணக்கெடுப்பில் ஆயிரம் கோணல்கள், குளறுபடிகள்!

பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு ஊழியர்கள் நேரடியாகச் செல்லவில்லை. முகாம் நடத்துவதுபோல் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு விவரங்களைச் சேகரித்தனர். இதனால் தாங்கள் சந்தித்த துயரங்களைக் கூட அரசு ஊழியர்கள் கேட்கத் தயாராக இல்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் வழக்கம்போல் இந்த விஷயத்திலும் ஆளுங் கட்சியின் தலையீடு அதிகரித்தது. கணக்கெடுக்கச் செல்லும் அரசு ஊழியர்களை ஆளுங்கட்சிக் கவுன்சிலர்களும் பிரமுகர்களும் கையில் வைத்துக் கொண்டு, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க வற்புறுத்தியதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

வங்கிக் கணக்கில்தான் நிவாரணம் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் கணக்கெடுக்கச் சென்ற ஊழியர்கள், பெரும்பாலான இடங்களில் மக்களிடம் வங்கிக் கணக்கு ஆவணங்கள், முகவரி ஆவணங்களைக் கூட முறையாக வாங்காமல் அவசர கதியில் வந்து சென்றனர்.

ஆனால் ஆளுங்கட்சிக் கவுன்சிலர்கள் மற்றும் பிரமுகர்கள் கை காண்பிக்கும் மக்களிடம் மட்டும், முழு விவரங்களைக் கேட்டதுடன், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் வங்கிக் கணக்கு எண்களை நிவாரணப் பட்டியலில் சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரே ஒரு ரேஷன் கார்டு வைத்துள்ள நபரின் வீட்டில் வசிக்கும் வாரிசுகளுக் கும் முறைகேடாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ள தாக புகார் கூறப்படுகிறது. குறிப்பாக ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களில்தான் இதுபோன்று முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று பல்வேறு முறைகேடுகளுடன் நடந்த கணக்கெடுப்புப் பணி கடந்த சில தினங் களுக்கு முன் முடிவடைந்தது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 93 ஆயிரத்து 716 குடிசைகள் முழுமையாக மற்றும் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும், 25 லட்சத்து 48 ஆயிரத்து 152 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த தாகவும் கணக்கிடப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் அரசு அறிவித்தது. இதில் 14 லட்சம் பேரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதால் முதல்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரணம் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய நிவாரண நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் மொத்தம் 30.42 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு நடத்தியுள்ள தாகத் தெரிவிக்கும் அரசு, அவசர, அவசரமாக 14 லட்சம் பேருக்கு மட்டும் உடனடியாக நிவாரணம் வழங்கியதன் காரணம் என்ன என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதிலிருந்து இந்த ஆட்சியினர் தவறுக்கு மேல் தவறு செய்வதாகத்தான் கருத வேண்டும். செம்பரம்பாக் கம் ஏரித் தண்ணீரைத் திறந்துவிட்டதில் செய்த தவறை, நிவாரணம் வழங்குவதிலும் செய்வதாகவே பாதிக்கப்பட்டோர் எண்ணுகிறார்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Dravida Munnetra Kazhagam leader karunanidhi issue the statement of fake flood victims list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X