For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணலே இப்படி கெட்டுப் போயிருக்கே.. அப்ப மக்களோட நிலை? ஸ்டெர்லைட் களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்!

ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் மணலே கறுப்பு நிறமாகியுள்ளதால் மக்களின் என்னவாகியிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் மணலே கறுப்பு நிறமாகியுள்ளதால் மக்களின் என்னவாகியிருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையால் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் சுவாசக்கோளாறு, ரத்தசோகை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆதரவு

ஆதரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48வது நாளை எட்டியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கறுப்பாக மாறிய மணல்

கறுப்பாக மாறிய மணல்

மக்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மணல் கறுப்பு நிறத்தில் மாறியுள்ளது.

தன்மை எப்படி இருக்கும்?

தன்மை எப்படி இருக்கும்?

இதற்கு காரணம் ஆலையில் இருந்து வெளியாகும் கருமையான நச்சுபுகையே என கூறப்படுகிறது. மண்ணின் நிறத்தை பார்க்கும் போதே அதன் தன்மை எப்படி இருக்கும் என தெரிகிறது.

எம்மாதியான விளைவு

எம்மாதியான விளைவு

மண்ணின் நிறத்தையே மாற்றும் இந்த கரும்புகை அதனை சுவாசிக்கும் மனிதர்களுக்குள் எம்மாதியான விளைவை ஏற்படுத்தும் என்ற பீதி எழுகிறது. ஸ்டெர்லைட் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதும், கருத்தரித்த பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

நடவடிக்கை எடுக்குமா அரசு?

நடவடிக்கை எடுக்குமா அரசு?

அதையும் தாண்டி தவமிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றெடுக்கும் பிள்ளைகள் பல குறைபாடுகளுடனும் பல்வேறு நோய்களுடனும் பிறப்பது அவலத்தின் உச்சம். மக்களின் போராட்டத்தையும் அதன் அவசியத்தையும் புரிந்து இனியாவது நடவடிக்கை எடுக்குமா அரசு?

English summary
Sterlite area sand color has chnged black due to Dark smoke of Sterlite. How it will affect people?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X