For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.. நாளை மக்களை சந்திக்கிறது மாநில மனித உரிமைகள் ஆணையம்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது சுடப்பட்டு காயமடைந்தவர்களை சந்திக்க நாளை மாநில மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி செல்ல உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது சுடப்பட்டு காயமடைந்தவர்களை சந்திக்க நாளை மாநில மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி செல்ல உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Sterlite Shooting: Tamilnadu State Human Rights Commission will meet victims of Tuticorin

பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்ஹ்சை பெற்று வருகிறார்கள்.

இந்த மோசமான சம்பவத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. தமிழக அரசுக்கு எதிராக இதில் செயல்படுவோம் என்று உறுதி அளித்தது.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது சுடப்பட்டு காயமடைந்தவர்களை சந்திக்க நாளை மாநில மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி செல்ல உள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் நாளை தூத்துக்குடி செல்கின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த பகுதிகளில் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்வார்கள். ஆட்சியர் அலுவலகத்திலும் ஆய்வு நடத்த உள்ளனர். போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.

English summary
Sterlite Shooting: Tamilnadu State Human Rights Commission will meet victims of Tuticorin tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X