அதிர்ந்த திருப்பத்தூர்.. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை! பெற்றோர்கள் பீதி.. வனத்துறையினர் விரைந்தனர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உடனடியாக பள்ளியில் உள்ள மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்
வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த பள்ளி உள்ளது. அருகிலேயே ரயில் நிலையமும் இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இந்த பகுதி காட்சி அளிக்கும்.

இந்த நிலையில் தான் இந்த பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை முதியவர் ஒருவரை தாக்கியுள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முதியவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பள்ளியில் உள்ள மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியிலும் வனத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்குள் இந்த சிறுத்தை எப்படி நுழைந்தது? என வனத்துறையினருக்கும் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிறுத்தையை பிடிக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளார். பள்ளிக்குள் சிறுத்தைகள் புகுந்துள்ளதாக வெளியான செய்தியை அறிந்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி அமைந்து இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கேயும் வனப்பகுதி இல்லை. சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் தான் வனப்பகுதி உள்ளதால் இவ்வளவு தொலைவு கடந்து சிறுத்தை எப்படி வந்தது என்பது வனத்துறையினருக்கே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
வனத்துறையினரும் காவல்தூறையினரும் இணைந்து வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்து வருகிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் சிறுத்தையை பார்க்கும் ஆவலுடன் அங்கே திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications