ஆளுங்கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? எச்.ராஜாவிற்கு சுப.வீ கண்டனம்!
சென்னை: போலீஸ் மற்றும் நீதிமன்றங்களை அவமதித்து பேசிய எச்.ராஜா மீது போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று சுப வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய இணைய வைரல் எச்.ராஜாதான். அவரது வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.

அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார்.
மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது. அவரது அநாகரீகமாக பேச்சு எல்லோருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
"ஹைகோர்ட்டாவது மயிராவது " என்று பேசியுள்ள #ஹெச்ராஜா வின் மீது என்ன நடவடிக்கை? இது #நீதிமன்றஅவமதிப்பு இல்லையா? ஆளுங்கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? @HRajaBJP pic.twitter.com/Vj0t8cYpG4
— SubaVeerapandian (@Suba_Vee) September 15, 2018
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் தனது டிவிட்டர் போஸ்ட்டில் "ஹைகோர்ட்டாவது */-$%#" என்று பேசியுள்ள ஹெச்ராஜா வின் மீது என்ன நடவடிக்கை? இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? ஆளுங்கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? '' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல அரசியல் தலைவர்கள் எச்.ராஜாவிற்கு எதிராக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் எச்.ராஜா மீது இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.