ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது: மீண்டும் ஏழரையை கூட்டும் பொர்க்கிப் புகழ் சு.சாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் சிறந்த நடிகர்கள் என்றும் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி சின்னாபின்னமாகி வருகிறார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி. இவர் தமிழர்களை பொர்க்கி என்று கூறுவதோடு தமிழகர்களுக்கு எதிராக கருத்து கூறுவதில் வல்லவர்.

விவசாயிகள் போராட்ட, மீனவர்கள் பிரச்சனை, ஜல்லிக்கட்டுப் போராட்டம் என அனைத்தையும் ஆரம்பம் முதலே கொச்சைப்படுத்தி வரும் சுப்பிரமணிய சாமி தமிழர்களுக்கு எதிராக நடப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.

விடுவிக்க வாய்ப்பில்லை

விடுவிக்க வாய்ப்பில்லை

இந்நிலையில் வேலூர் மாவட்டம் கலவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணிய சாமி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாக வாய்ப்பில்லை என்றார்.

ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது

ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது

மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சுப்பிரமணியசாமி ரஜினிகாந்துக்கு அரசிலைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று நக்கலாக கூறினார்.

தமிழக அரசியல்வாதிகள் நடிகர்கள்

தமிழக அரசியல்வாதிகள் நடிகர்கள்

மேலும் தற்போதை தமிழக அரசியல் நிலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணிய சாமி தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் சிறந்த நடிகர்கள் என கிண்டலடித்தார்.

நேற்று தினகரனுக்கு ஆதரவு

நேற்று தினகரனுக்கு ஆதரவு

ஜெ மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாக பேசி வரும் சுப்பிரமணிய சாமி நேற்று தினகரன் இரட்டை இலைச்சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்தாக எழுந்த புகாரில் அதற்கு ஆதாரம் உள்ளதா என கேட்டு நெடிசகன்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP Senior leader Subramaniya samy says that Rajinikanth dont now anything about polytics. Tamil politicians are the actors.
Please Wait while comments are loading...