சென்னையின் சில பகுதிகளில்.. சடாரென மழை பெய்து சட்டென தலை காட்டிய குளுமை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சில பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்து சற்று நேரம் குளிர்ச்சி நிலவியது.

வெப்பச்சலனம் காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Sudden rain in some places of Chennai today

இந்நிலையில் சென்னை வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் திடீரென கருமேகம் திரண்டு சடசடவென சாரல் மழை பெய்தது. இதனால் சற்றுநேரம் குளிர்ச்சி நிலவியது.

ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் வெயில் சுள்ளென சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. சென்னையின் புறநகர் பகுதிகளில் மேகமூட்டமாக காணப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லப்புத்தூரில் 8 செ.மீ, நெய்வேலியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sudden rain in some places of Chennai today. The Chennai meteorological center said that North and south Chennai will get rain today.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற