சிறந்த நிர்வாகதன்மை கொண்டவர் ஜெயலலிதா: நாடாளுமன்றத்தில் சுமித்ரா மகாஜன் புகழாரம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாடாளுமன்ற சபா நாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவு நாட்டிற்கே ஏற்பட்டுள்ள இழப்பு என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாடாளுமன்ற சபா நாயகர் சுமித்ரா மகாஜன் புகழஞ்சலி செலுத்தினார்.
நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று 11.30 மணிக்கு ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜெயலலிதாவின் மறைவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, ஜெயலலிதா சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் என்று சபா நாயகர் சுமித்ரா மகாஜன் புகழாரம் சூட்டினார். மேலும், ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல; நாட்டிற்கே ஏற்பட்டுள்ள இழப்பு என்றும் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவு அரசியலில் ஒரு பின்னடைவு என்றும் சுமித்ரா மகாஜன் நாடாளுமன்றத்தில் புகாழரம் சூட்டினார். பின்னர், நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications