ஈரோடு, கரூர், வேலூர், கரூர் 104, சேலம், திருச்சி தருமபுரி 103 - இன்றைய வெப்பநிலை
சென்னை: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலையில் 107 டிகிரி பாரன்ஹீட் வரை தகித்த வெயில் மாலையில் சற்றே குறைந்தது ஆனாலும் கரூர், ஈரோடு வேலூர் ஆகிய நகரங்களில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பூர், சேலம், வேலூர், தருமபுரியில் 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது காலை 10 மணி முதலே கத்திரி வெயிலைப்போல அனல் மண்டையை பிளந்தது. நேரம் செல்லச் செல்ல பல மாவட்டங்களில் அனலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது, மாலையில் சற்றே வெயில் குறைந்தது.

பல நகரங்களில் பதிவான வெப்பநிலை 5மணி நிலவரப்படி ( பாரன்ஹீட்)
சென்னை - 97
மதுரை - 100
திருச்சி - 103
கோவை - 96
திருப்பூர் - 99
நெல்லை - 90
தூத்துக்குடி - 97
சேலம் - 103
வேலூர் - 104
கரூர் - 104
ஈரோடு - 104
கிருஷ்ணகிரி - 101
தருமபுரி - 103
திண்டுக்கல் - 102
விருதுநகர் - 98
ராமநாதபுரம் - 92
கொடைக்கானல் - 75
உதகமண்டலம் - 77
வெயில் கொளுத்தியதால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.
கத்திரி வெயில் மே மாதம் 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நீடிக்கும். இதற்கு முன்னதாக தமிழகத்தில் கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கான அறிகுறிகள் குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு வலுசேர்ப்பது போல தமிழகத்தில் 107 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது இது தொடர்ந்து 30ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 30ம் தேதி வரை சென்னையில் சராசரியாக 103 டிகிரி முதல் 108 டிகிரி வெயில் நிலவும் என்று எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களான தர்மபுரி, கரூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் சராசரியாக 105 டிகிரி வெயில் நிலவும் என்று கூறியுள்ளனர். ஏப்ரல் 30ம் தேதி அரக்கோணம், மீனம்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் 108 டிகிரி எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications