ஸ்ரீ ரெட்டி சொல்வதெல்லாம் பொய்.. வழக்கு தொடருவேன்.. இயக்குனர் சுந்தர்.சி - Exclusive
தன் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என இயக்குனர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் தவறானது என்றும், இது தொடர்பாக உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் மீது புகார் கூறியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனால் தெலுங்கு திரையுலகத்தில் சுனாமி வந்தது போல் பரபரப்பு கிளம்பியது.
தெலுங்கு திரையுலகிற்கு ஒரு சிறிய ஓய்வு கொடுத்துள்ள ஸ்ரீ ரெட்டி புயல், தற்போது தமிழ் சினிமா பக்கம் திசை திரும்பி, சூறாவளியாக வீசி வருகிறது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு கிளப்பினர் ஸ்ரீ ரெட்டி.

அடுத்தது சுந்தர்.சி
தற்போது இயக்குனர் சுந்தர்.சி பற்றி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஐதராபாத்தில் அரண்மனை படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர் சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார்" என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

அரண்மனை படப்பிடிப்பின் போது
பேஸ்புக் மூலம் எனக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பர் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரையும் சந்தித்தேன். அடுத்த படத்தில் உங்களுக்கு நிச்சயம் முக்கிய கதாபாத்திரம் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்.

பாலியல் சமரசம்
படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட் (பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன் பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு மோசடிகாரன். அவர் எனக்கு உதவி செய்யவில்லை" என தனது பேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். #tamilleAks

சுந்தர்.சி மறுப்பு
இதுதொடர்பாக இயக்குனர் சுந்தர்.சி -யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.. அப்போது ஸ்ரீ ரெட்டியின் புகாருக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " அவர் (ஸ்ரீ ரெட்டி) கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் வழக்கு தொடர்வோம்" என சுந்தர்.சி தெரிவித்தார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications