மாசியிலயே வெயில் மண்டைய பொளக்குதே... சித்திரை எப்படியோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Chennai weather...வெயில் கொளுத்தப் போகிறது..வீடியோ

  சென்னை : பங்குனி மாத வெயில் பல்லைக்காட்டும் என்பார்கள் ஆனால் மாசியிலயே வெயில் மண்டையை பிளக்கிறது. தற்போதே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கும் நிலையில் பங்குனி, சித்திரையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் மக்களுக்கு இப்போதே வரத் தொடங்கிவிட்டது.

  வடகிழக்குப் பருவ மழையின் தொடக்க காலத்தில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடானது. ஐயையோ மழையா என்று எல்லோரும் பதறியடிக்க அந்த 10 நாள் மழையோடு பைபை சொல்லிவிட்டது பருவமழை.

  மழை முடிந்து பனி செம போடு போட்டது. மாலை நேரத்தில் 6 மணி முதலே தொடங்கும் பனியானது காலை 10 மணி வரையிலும் கூட விலகாததால் பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகளைத் தந்தது.

  மாசியிலயேவா

  மாசியிலயேவா

  மழை, பனியெல்லாம் முடிந்து மாசி மாதத்தில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று பார்த்தால். வெயில் இப்போதே சுள்ளென்று சுட்டெரிக்கிறது.

  வெப்பநிலை அதிகரித்துள்ளது

  வெப்பநிலை அதிகரித்துள்ளது

  இதற்கு ஏற்றாற் போல சென்னை வானிலை மையமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனிவரும் நாட்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும என்று கூறியுள்ளது. மேகக்கூட்டங்கள் நிலவுவதன் காரணமாக குறைந்தபட்ச வெப்ப நிலையில் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

  விரைவாக சூரிய உதயம்

  விரைவாக சூரிய உதயம்

  கால நிலையானது குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்தை நோக்கி மாறத் துவங்கியுள்ளதால் சூரியன் விரைவாகவே உதித்து வருகிறதாம். இதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.

  பட்டைய கிளப்புது வெயில்

  பட்டைய கிளப்புது வெயில்

  மாசி மாதத்திலேயே பங்குனி வெயில் பட்டைய கிளப்புதே இனி பங்குனி, சித்தரைலாம் எப்படி இருக்கப் போகுதோ என்று மக்கள் இப்போதே அச்சப்படத் தொடங்கிவிட்டனர். அடுத்தது என்ன கோடைக்கு ஏற்ற ஆடைகள், பழச்சாறு உள்ளிட்டவற்றை தேடி ஓடி வேண்டியது தான்.

  வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு:

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  chennai feels hot sooner after the fog season ends, if February itself so sunny what about the peak summer months of April, May. People were getting ready to face the summer.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற