வழக்கறிஞர்கள் வாய்தா கேட்பதை வாடிக்கையாக்கக்கூடாது.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அட்வைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கறிஞர்கள் வாய்தா கேட்பதை வாடிக்கையாக்கக்கூடாது என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ஹைகோர்ட் கட்டடத்தின் 125வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்துகொண்டு பேசினார்.

Supreme court chief justice Deepak misra praises chennai high court

அப்போது தமிழக கோர்ட்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நல்ல முன்னேற்றம் பெற்று வருவதாக அவர் கூறினார். சென்னை ஐகோர்ட்டில் பல சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

நீதியை எதிர்பார்த்தவர்களுக்கு ஐகோர்ட் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்றும் அவர் கூறினார். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைந்து செயல்பட்டால், நீதி விரைவாக கிடைக்கும் என்றும் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.

வழக்குறிஞர்கள் வழக்கு விசாரணைக்கு தயாராக வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வாய்தா கேட்பதை வாடிக்கையாக்க கூடாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Supreme court chief justice Deepak misra praises chennai high court. He said chennai high court gives special judgements.
Please Wait while comments are loading...