இடியும் நிலையில் இருந்த சுரண்டை பேருந்து நிலையம்... புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: சுரண்டையில் கட்டி 48 ஆண்டுகள் ஆன சேதமடைந்த பேருந்து நிலைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் இதற்கான பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையம் கடந்த 1963 ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 1971ல் திமுக ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது. 2005ல் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக சுரண்டை தொழிலதிபர் எஸ்.வேலாயுதநாடார் சன்ஸ் இலவசமாக 42 சென்ட் இடம் வழங்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

Surandai busstand renovation works begins with Boomi Poojai

பேருந்து நிலைய கட்டிடம் கட்டி 48 ஆண்டுகள் ஆன நிலையில் இடியும் தருவாயில் இருந்ததால் உள் கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் கீழ் (O & M SCHME) கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.75 லட்சம் நிதி கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சுரண்டை பேருந்து நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் சுரண்டை சேர்ந்தமரம் ரோட்டில் உள்ள புதிய மார்க்கெட் அருகில் உள்ள தாட்கோ வணிக வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது .

இந்நிலையில் நேற்று தென்காசி தொகுதி எம்.எல்.ஏ .செல்வமோகன்தாஸ் பாண்டியன் பூமி பூஜை செய்து பஸ் நிலைய புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார் .அப்போது ரூ.75 லட்சத்தில் அனைத்து பணிகளும் முடிக்க முடியுமா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது தனது சட்டமன்ற நிதியில் இருந்து முகப்பு நுழைவாயில் கட்டுவதற்கு ரூ 15 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் முதல்வரிடம் பேசி கூடுதலாக ரூ. 50 லட்சம் நிதி வாங்கிக்கொடுப்பதாக செல்வமோகன்தாஸ் உறுதியளித்துள்ளார்.

Surandai busstand renovation works begins with Boomi Poojai

சுரண்டை வியாபாரிகள் சங்கம் ,சுரண்டை நாடார் வாலிபர் சங்கத்தை சேர்த்தவர்கள் நெல்லையில் இருந்து வரும் பஸ்கள் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் வழியாக வந்து புதுப்பிக்கப்படும் பஸ் ஸ்டாண்ட் முன்பு நின்று பொதுமக்களை ஏற்றி, இறக்கி விடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் பொதுமக்கள் கடை மற்றும் மருத்துவமனைக்கு சுலபமாக வரமுடியும், என கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ உடனடியாக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் முன்பு வந்து செல்ல கேட்டுக்கொண்டார். சுரண்டை புதிய மார்க்கெட் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தையும் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பார்வையிட்டார். பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி ஆறு மாத காலத்தில் முடிக்கப்படும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirunelveli : 48 years old Surandai busstand renovation works begins with Boomi Poojai by Tenkasi MLA selvamohandoss Pandiyan, he assured to give Rs.15 lakhs for busstand reconstruction.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற