தெறிக்க விட்ட எச். ராஜா.. ஓடி வந்து வீடியோவை பகிர்ந்த எஸ்.வி சேகர்.. மாட்டிக்கிட்டீங்களே பாஸ்
சென்னை: தமிழக போலீஸ் மற்றும் நீதிமன்றங்களை அவமதித்து எச்.ராஜா கொச்சையாக பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் பேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளார்.
பாஜக ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இணையத்தில் ''நெகட்டிவ் டிரெண்ட்'' ஆகியுள்ளது. இப்போதுதான் பாசிச பாஜக ஒழிக என்று மாணவி சோபியா வைரலானார். அதற்குள் எச்.ராஜா வைரலாகி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெரிய
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார்.மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது. அங்கு அவர் போலீசையும், நீதிபதிகளையும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.
https://www.facebook.com/sve.shekher/posts/10156091329602496?__xts__[0]=68.ARC17Gpm5orpD7Etmyw-GEP8aNN6vVj9qzIsbTC55J7NTzdYnyJuP-nR-qdZYP8VtVqpy0cccSaVoSEwzfhjT-NFr9dpjEFvUrTxxfv-g_kOi93mCQqbw_iHa8EbArygr7rD30Qy2N9CUtbvhv-5WodVNkU4CTf0IaN7nFjX_3NRB9QlJ6eg_WQ&__tn__=-R |
எச்.ராஜாவிற்கு எஸ்வி சேகர்
இந்த நிலையில் எச்.ராஜாவின் வீடியோவை பாஜகவை சேர்ந்த நடிகர், எஸ்.வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். . தெறிக்க விட்ட எச். ராஜா ஜீ, என்ற போஸ்டை அவர் ஷேர் செய்துள்ளார். ஆனால் கமெண்ட் பாக்சில் அவரை கலாய்த்து பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்

அவரே மறுப்பு
இந்த நிலையில்தான் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. எச்.ராஜாவே அந்த வீடியோவில் பேசியது நான் கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் அதை வைத்தே அவரை பாராட்டுவதாக எண்ணிக்கொண்டு அவரது கட்சிக்காரரே வீடியோ பகிர்ந்து இருக்கிறார். இப்பொது அது அவர் பேசிய வீடியோதானா, இல்லையா என்று யாரவது தெளிவாக சொல்லுங்கள் என்றது நெட்டிசன்கள் கேள்வி கேள்வி கேட்டு வருகிறார்கள். இதனால் இருவருக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்பே அப்படித்தான்
இதற்கு முன்பே எஸ்.வி சேகர் பேஸ்புக், டிவிட்டர் மூலம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறாக பேசி வழக்கு வரை சென்றது. ஆனால் அப்போது தமிழக போலீஸ் இவரை கைது செய்யாதது குறிப்பிடத்தக்கது.