For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பன்றி காய்ச்சலால் பாதித்த வாலிபர் மருத்துவமனையில இருந்து தப்பி ஓடி மரணம்- நோயாளிகள் பீதி

Google Oneindia Tamil News

நெல்லை: பன்றி காய்ச்சல் பாதிப்புடன் நெல்லை அரசு மருத்துவமனையில் இருநது நள்ளிரவு தப்பிய வாலிபர் பலியானார். இதனால் பிற நோயாளிகள் பீதியில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரம்குடியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கேரள மாநிலத்தில் கடந்த ஓன்றரை வருடமாக தங்கியிருந்தார். சில வாரங்களாக இவருக்கு சளி இருமல் இருந்து வந்த நிலையில் கோவையில் ஓரு மருத்துவமனையில சிகிச்சை பெற்றார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

Swine flu youth dies after fleeing from hospital

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிபபு ஏற்பட்டிருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அவரை தொற்று நோய் சிகிச்சை சிறப்பு பிரிவில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் லட்சுமணன் திடீரென யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் மாயமானார். இதற்க முன்பு காய்ச்சல் அதிகரித்ததும் அவரது உறவினர்கள் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரை அழைதது சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அவர் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுளளார்.

லட்சுமணன் தப்பியது தொடர்பாக நெல்லை மருத்துவமனை வட்டாரம் தூத்துக்குடி சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்தது. சுகாதார அதிகாரிகள் லட்சுமணனின சொந்த ஊருககு சென்று விசாரித்து அவரை பிடித்து மீண்டும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். அதற்குள் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு முற்றியது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அ்ங்குள்ள மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் பாதுகாப்பான முறையில் லட்சுமணன் உடலை அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகி்ன்றனர். இந்த சம்பவம் மருத்துவமனையில சிகிச்சை பெற்று வரும் மற்ற தொற்ற நோயாளிகளை பீதி அடைய செய்துள்ளது.

English summary
A swine flu affected youth died after fleeing from the Govt hospital in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X