இதோ இதுதான் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்த அந்த 37 அதிரடி அறிவிப்புகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 37 அதிரடி அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் இன்று வெளியிட்டார்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறையில் வெளியிடுவோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

Tamil Nadu assembly Minister Senkottaiyan 37 new annoucement

தமிழக சட்டசபையில் இரண்டாம் நாளான இன்று பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. காலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பிற்பகலில் அமைச்சர் செங்கோட்டையன் 37 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

• தமிழகம் முழுவதும் 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். மலை கிராமங்களில் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
• மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
• ரூ.30 கோடி செலவில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படும்
• கல்வி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமை கல்வி விருது வழங்கப்படும்
• 486 அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் மையங்கள் அமைக்கப்படும்
• 3 கோடி செலவில் 32 மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்
• 4084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
• மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்
• கீழடியில் ஒரு நூலகம் அமைக்கப்படும்
• அரியவகை நூல்கள், ஆவணங்களுடன் நூலகம் அமைக்கப்படும்
• 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்
• அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
• சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருது அளிக்கப்படும்
• நூலகங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
• முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு 6000 மாத உதவித்தொகை வழங்கப்படும்
• 89 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister K A Senkottayan has announced today 37 importent announcement on school education department.
Please Wait while comments are loading...