புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா- முதல்வர் ஈபிஎஸ் டெல்லி பயணம்... விவசாயிகளை சந்திப்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவர் தமிழக விவசாயிகளை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், நாளை நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பதவியேற்பு விழாவில், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

Tamil Nadu CM Edapadi Palanisamy visits Delhi

தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். காலையிலேயே ஓபிஎஸ் தனது அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லி சென்றுள்ளார்.

பிரதமரையும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியுள்ளார் ஓபிஎஸ். இந்த நிலையில் டெல்லி செல்லும் ஈபிஎஸ் பிரதமரை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓபிஎஸ் உடன் அணிகள் இணைப்பு குறித்து பேசுவாரா? அல்லது போன சுவடு தெரியாமல் திரும்பி விடுவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கடந்த முறை போராடிய போது முதல்வர் நேரில் சந்தித்து சில வாக்குறிகளை அளித்தார். அவை நிறைவேற்றப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. இம்முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசுவாரா என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief Minister Edappadi K Palanisamy on Monday left for New Delhi where he will attand in swearing-in ceremony of Ram Nath Kovind.
Please Wait while comments are loading...