அன்பை என் மீது அளவில்லாமல் பொழியும் மக்கள்.. எடப்பாடிக்கு நிறைய கலக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின் சுளீர்
அரியலூர்: தமிழ்நாட்டு மக்கள் என் மேலும், திமுக மேலும் வைத்திருக்கும் நம்பிக்கையும் அளவில்லாமல் பொழியும் அன்பும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, கொஞ்சம் அல்ல நிறைய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என பேசியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரியலூரில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கும் அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வணக்கம் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,"நான், பிரச்சினைகளை நேர்கொண்டு நிற்கிறேன். அந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறேன். மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்கள் தீட்டுகிறேன்! திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்று கள ஆய்வு செய்கிறேன்!
சொன்னால் சொன்ன நாட்களுக்குள் திட்டங்களைத் திறந்து வைக்கிறேன். அதனால்தான், இந்த ஸ்டாலின் எங்கு சென்றாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்! எங்கள் குறைகளை போக்குவார் என்ற நம்பிக்கையோடு, தேடி வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கையை, நான் எந்நாளும் காப்பாற்றுவேன்! காப்பாற்றுவேன்! என்று உறுதிதருகிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் என்மேலும், தி.மு.க. மேலும் வைத்திருக்கும் நம்பிக்கையும் அளவில்லாமல் பொழியும் அன்பும் எதிர்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்களுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொஞ்சம் அல்ல. நிறைய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்களது மக்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் வரவேற்பு தருகிறார்கள் என்பதை அவர்களும் பார்க்கிறார்கள். எங்கே, மக்கள் தன்னை மறந்துவிடுவார்களோ என்று நினைத்து நாள்தோறும் மீடியாவின் முன்பு தன்னுடைய பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்.
"2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க. தந்ததாகவும்; அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை கொண்டு வந்து, அவர் மறைவிற்குப் பிறகு நான்கு ஆண்டு தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும்" கொடுத்திருக்கிறார். சிரிக்காமல் பேட்டி பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது. இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்.
தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு என்று ஒன்றை நடத்தினார் பழனிசாமி அவர்கள். அது உங்களுக்கு தெரியும். 3 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை, தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் என்று பெருமையோடு பேசினார்.
நான் கேட்கிறேன். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி அவர்களே... நீங்கள் நடத்திய முதலீட்டாளர் மாநாடு மூலமாக எவ்வளவு முதலீடுகள் வந்தது? இதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? இதையெல்லாம் புள்ளிவிவரத்துடன் உங்களால் சொல்ல முடியுமா? வந்தவர்களையும் விரட்டி விட்டார்கள். ஏன் என்றால், கரப்ஷன் கமிஷன் கலக்ஷன். அந்த ஆட்சிக்குப் பயந்து, தமிழ்நாட்டை விட்டு ஓடிச்சென்றவர்கள் பலபேர், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து தொழில் மறுமலர்ச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 31 இலட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 10 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறோம். உடனடியாக அவர்களை தொழில் தொடங்க அனைத்துவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இதுதான் நல்லாட்சியின் அடையாளம்!
ஆனால், பழனிசாமி ஆட்சியின் நிலைமை என்ன? "எப்போதுதான் முடியும் இந்த ஆட்சி"-என்று, தன்மானம் உள்ள ஒவ்வொரு தமிழரும் காத்திருந்த நிலையில் தான் இருந்தது பழனிசாமி ஆட்சி. ஆனால், திராவிட மாடல் ஆட்சி என்பது, 'இது எங்களுடைய ஆட்சி! எங்களுக்கான ஆட்சி! எங்கள் வாழ்வை வளம் பெற வைக்கும் ஆட்சி! எந்நாளும் தொடர வேண்டும் தி.மு.க. ஆட்சி'- என்று மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது!
கடந்த வாரம் மேற்கு மண்டலம் சில நாட்களுக்கு முன்பு தென் மண்டலம் இன்றைக்கு மத்திய மண்டலம் என்று தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுடன் இருக்கிறேன். இப்போது மட்டுமல்ல. கிட்டதட்ட 60 ஆண்டுகளாக நான் மக்களோடுதான் இருக்கிறேன். தேர்தலுக்காக வருபவன் அல்ல நான். உங்கள் தேவைகளை அறிந்து, தீர்த்து வைப்பதற்காக எப்போதும் உடனிருப்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது. அந்த வளர்ச்சியை உறுதிசெய்யத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்கிறோம். ஒவ்வொரு பயணத்திலும், ஒரு அனுபவம் மறக்க முடியாததாக அமைந்துவிடுகிறது. கடந்த வாரம் விருதுநகர் பயணத்தில், 'அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்திற்கு' நான் சென்றது. என் வாழ்நாள் முழுமைக்கும். மறக்க முடியாததாக மாறிவிட்டது! அந்தக் காப்பகத்திலிருந்த குழந்தைகளுக்காக, நான் கேக், பழம் வாங்கிக்கொண்டு சென்று பார்த்தேன். அவர்களோடு இருந்த ஒவ்வொரு நொடியும், அவர்கள் என் மேல் காட்டிய பாசமும் என்னை உருக வைத்தது! ஒரு முதலமைச்சர் நம்மைப் பார்க்க வருகிறார். ஃபார்மாலிட்டிக்கு பேசவதுபோல் எந்த பாசாங்கும் அந்தக் குழந்தைகளிடம் இல்லை! "அப்பா..."-என்று அவர்களின் இதயத்திலிருந்து வந்த சொல், என்னுடைய இதயத்தில் ஆழமாக பதிந்தது!
மூன்றாண்டு ஆட்சியில் நிதி நெருக்கடி திட்டமிட்ட அவதூறுகள் செயற்கையாக உருவாக்கப்படும் தடைகள் என்று எதையும் பொருட்படுத்தாமல், எதிர்கால தமிழ்நாடு. வளமான நலமான தமிழ்நாடாக இருக்க வேண்டும் என்று திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்." என்றார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications