மேஜிக் நம்பருக்கு 11 இடங்கள் தேவை! தமிழகத்தில் தொங்கு சட்டசபை? யாருடன் கூட்டணி வைக்க போகிறார் விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 109-ல் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழக வரலாற்றில் புதியதாக போட்டியிட்ட ஒரு கட்சி இத்தனை இடங்களில் முன்னிலை என்பது இரு திராவிடக் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என சொல்லலாம். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை எனும் பட்சத்தில் தவெக யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 17-ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த முறையை காட்டிலும் அதிகம்.

Tamil nadu assembly election results 2026
Photo Credit:

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குகள் பதிவாகின. இவற்றை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த வாக்குகள் அரை மணி நேரத்தில் எண்ணி முடிக்கப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுடையது. 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகளின் வெற்றி நிலவரங்கள், வாக்குப் பதிவு இயந்திரங்களை எண்ணுவதற்கு கடைசி சுற்றுக்கு முன்னர் அறிவிக்கப்படும்.

திமுக கூட்டணி 74 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும், தவெக 107 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை.

திமுக கூட்டணியில் திமுக 60 இடங்களிலும் , காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், தேமுதிக 1 இடத்திலும் , விசிக 2 இடத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி 2 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

அது போல் அதிமுக கூட்டணியை பொருத்தமட்டில் அதிமுக 47 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் பாமக 4 இடங்களிலும், அமமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. தவெகவை பொருத்தமட்டில் 107 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர்களாக தற்போதைய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். அதிமுக 167 இடங்களிலும் திமுக 164 இடங்களிலும் பாஜக 27 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அது போல் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தவெக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் எடப்பாடி தொகுதி வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் 233 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+