தேர்தல் ஆணையம் இடம் மாற்றிய அதிகாரிகளை மீண்டும் பழைய பதவியில் நியமித்த அரசு
சென்னை: தேர்தலின்போது இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மீண்டும் பழைய பதவிகளுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் பழைய பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அப்போது தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்கள் தற்போது மீண்டும் பழைய பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது,
"தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் கே.மகரபூஷணம், சேலம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். தொழில்துறை துணைச்செயலாளர் ஆர்.நந்தகோபால், வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் வி.கே.சண்முகம், ஈரோடு மாவட்ட கலெக்டராக மாற்றப்படுகிறார். சேலம் மாவட்ட கலெக்டர் ஹனீஷ் சாப்ரா, தொழில்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி, தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக மாற்றப்படுகிறார்.
தொழில்துறை இணைச்செயலாளர் ஜெ.குமரகுருபரன் , தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக மாற்றப்படுகிறார். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன், சர்க்கரை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சர்க்கரைக் கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications