தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஜில் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

இதனால் பகல் நேரங்களில் வெளியே வரவே மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பல இடங்களில் கோடை மழை கொட்டிவருகிறது.
ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே செங்கல்பட்டு, பரனூர் சுற்றுவட்டாரங்களில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் சாரல் மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications