ரெடியா இருங்க.. மழை வருமாம்.. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழகத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனத்தின் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை, கௌரவப்பள்ளி அணை ஆகிய இரு அணைகள் நிரம்பிவிட்டன.

Tamilanadu may get rain fall within 24 hours

மேட்டூர் அணையில் 70 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து விட்டது. பவானி சாகர் அணை உள்ளிட்ட பல அணைகலீல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், தென் தமிழகத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆங்காங்கே அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
With in 24 hours Tamilnadu may get rain shower, announced Chennai meteorological research center.
Please Wait while comments are loading...