அக்காவுக்கு ஒரு ஊத்தப்பம்.. சரவண பவனுக்கு திடீர் விசிட் அடித்த தமிழிசை, ஸ்மிருதி இரானி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் வந்திருந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன், சென்னை சரவண பவன் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இரு தினங்கள் முன்பு வந்திருந்தார் இரானி. அப்போது தமிழிசை அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

Tamilisai having lunch with Minister Smriti Irani at Saravana Bhavan

இதுகுறித்து தமிழிசை டிவிட்டரில், "பொது மக்களுடன் அமர்ந்து சென்னையிலுள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சிம்பிள் லஞ்ச் சாப்பிட்டோம். தமிழகத்திற்கு இது அதிசயமான காட்சி" என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொதுமக்களோடு சாப்பிட்டதை, தமிழகத்தில் கண்டிராத காட்சி என வர்ணனையோடு கூறியுள்ளார் தமிழிசை.

ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்த பிறகும் தமிழகத்தில் பல ஹோட்டல்களில் சாப்பாடு விலை குறையவில்லை என புகார்கள் வந்தன. அப்போது தி.நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் திடீரென சாப்பிட்டுவிட்டு, பில் சோதனை செய்து பார்த்து வந்தார் தமிழிசை என்பது நினைவிருக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"Simple lunch in a restaurant at chennai amidst common public casually with all RARE scene in TN indeed" says Tamilisai in Twitter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X