நான் டாக்டருக்குப் படிச்சது கருணாநிதி போட்ட பிச்சையா.. தமிழிசை கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நான் டாக்டருக்குப் படிச்சது கருணாநிதி போட்ட பிச்சையா?-வீடியோ

  சென்னை: தான் மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சை என ஸ்டாலின் கூறியிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சை என ஸ்டாலின் விமர்சித்ததாக தெரிகிறது.

  Tamilisai respond to Stalin's accusation on Medical study

  இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழிசை சவுந்தர்ராஜன், தான் மருத்துவம் படிக்கும் போது எம்ஜிஆர் தான் முதல்வராக இருந்தார் என தெரிவித்துள்ளார். அப்போது, நேர்முக தேர்வு மட்டுமே அமலில் இருந்தது என்றும் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

  தான் எந்த தேர்விலும், 'அரியர்ஸ்' வைக்காத, மாணவியாக இருந்ததாகவும், வெளிநாடுகளிலும் முழு தகுதியோடு படித்ததாகவும் அவர் கூறினார். தான் மருத்துவ படிப்பில் சேரும்போது, கருணாநிதி, பதவியில் இல்லை என்ற அவர் இதுகுறித்து, ஸ்டாலின் கூறியது நாகரிகமற்ற வார்த்தை என்றும் கண்டனம் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilnadu BJP leader Tamilisai respond to Stalin's accusation. She said when she studied Medicines that time MGR was the CM. Karunanidhi was not in the post she said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற