பெரியார் சிலை விவகாரம்: எச். ராஜாவுக்கு தமிழிசை கண்டனம்!
Recommended Video

சென்னை: தலைவர்கள் மற்றும் சிலைகளை அவமரியாதை செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை போல தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச். ராஜா முகநூலில் போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போராட்டம், கொடும்பாவி எரிப்பு சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பதிவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து எச். ராஜா நீக்கினார். தனக்கு தெரியாமல் தன்னுடைய அட்மின் முகநூலில் இந்த கருத்தை பதிவிட்டுவிட்டதாக ராஜா இன்று காலையில் புதிய விளக்கத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ராஜாவை கைவிட்ட பாஜக
பெரியார் சிலை குறித்து எச். ராஜா கூறிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்து என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று கூறி இருந்தார். எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமிழிசை கூறி இருந்தார்.

பாஜக நிலைப்பாடு என்ன?
எச். ராஜாவின் கருத்துக்கு கண்டனமும் தெரிவிக்காமல், ஆதரவும் தெரிவிக்காமல் இரண்டும் கெட்டானாக அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தமிழிசை கூறியதும் விமர்சனத்திற்கு உள்ளானது. எச்.ராஜாவின் கருத்தில் பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்ற கருத்தும் நிலவியது.
|
ராஜாவுக்கு தமிழிசை கண்டனம்
இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எச். ராஜாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருத்தை பதிவிட்டுள்ளார் தமிழிசை. அனைத்து தலைவர்கள் பங்களிப்பையும் மதிக்க வேண்டும், அனைவருக்கும் மரியாதை கொடுப்பதே தமிழர்கள் பண்பாடு.

அனைவரையும் மதிக்க வேண்டும்
தமிழ்நாடு, தமிழக மக்கள் அனைவரையும் மதிக்கக் கூடியவர்கள். தலைவர்கள் மற்றும் சிலைகளை அவமரியாதை செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அனைத்து தலைவர்களையும் நாம் மதிக்க வேண்டும் என்று தமிழிசை காட்டமாக தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications