வைகோவையும் ஸ்டாலினையும் மாறி மாறி விளாசிய தமிழிசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விளாசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார். அரசியல் தர்மம் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்ட அவர், குஜராத் ராஜ்யசபா தேர்தலில் அஹமது பட்டேல் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் பா.ஜ.கவின் அதிகார வெறிக்கு தேர்தல் கமிஷன் பலத்த அடி கொடுத்துள்ளது என்றார்.

Tamilnadu bjp Leader Tamilisai slams Vaiko and stalin

மேலம் பிற மாநிலங்களை போல தமிழகத்திலும் பாஜக தனது வேலையை காட்டுகிறது. ஆனால், அது நடக்காது என கடுமையாக தாக்கி பேசினார்.

இதேபோல் விஜயபாஸ்கர் டெல்லியில் முகாமிட்டிருப்பது குறித்து பேசிய ஸ்டாலின், தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவே அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இவர்களுக்கு சேர்த்து விளக்கம் அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். மதிமுக பொதுச்செயலாளர் வைககோ ஸ்டாலின் புகழ் பாடி வருவதாக அவர் சாடியுள்ளார்.

இதேபோல் ஸ்டாலின் கருப்புக் கண்ணாடி போட்டுள்ளதால் அனைத்து அவரது கண்ணுக்கு கருப்பாக தெரிவதாகவும் அவர் சாடினார். மேலும் நாடாளுமன்றத்தில் தம்பித்துரை தமிழில் பேசியதற்கு மற்ற மாநில எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu bjp Leader Tamilisai slams Vaiko and stalin. She told voiko is praising Stalin. And told about stalin, he is wearing black specs thats why everything is black to his eyes.
Please Wait while comments are loading...