டெல்லியில் நாளை பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை சந்திக்க உள்ளார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதன்கிழமையன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் மக்கள் பிரச்சினைக்காக சந்திப்பு என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம். இது எதிர் அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளதால் அவர் டெல்லி திரும்பிய பின்னர் புதன்கிழமையன்று பிரதமரை சந்திப்பார் என்று தெரிகிறது.
இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் தமிழக பிரச்சினை குறித்தும், அழுத்தம் கொடுக்கவே இந்த சந்திப்பு என்று கூறினாலும் ஓபிஎஸ் அணியினருக்கு மத்திய அரசு உடனான நெருக்கத்தை தெரியபடுத்தவே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியை தமிழக அமைச்சர்கள் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சில வாரங்களில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசினார். இப்போது மீண்டும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். மத்திய அரசுடன் நாங்களும் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே விரைவில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார் என்று தெரிகிறது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications