For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. எதிர்பார்த்ததை போல வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்த ஓ.பி.எஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்பார்த்ததை போலவே, வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று திருத்தப்பட்ட முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Tamilnadu government submit Tax free budget 2016-17

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது துறைவாரியாக அவர் ஒதுக்கிய நிதி விவரம்:

  • விவசாயத் துறைக்கு ரூ.1,680.73 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9, 073 கோடி நிதி ஒதுக்கீடு.
  • போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,295.08 கோடி நிதி ஒதுக்கீடு.
  • முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.928 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நலத்திட்டங்கள், மானியங்களுக்காக ரூ.68,211.50 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மின் துறைக்கு ரூ.13,856 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மாநில சமச்சீர் நிதியத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு
  • ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.
  • இலவச மடிக்கணினிகள், பாடநூல்கள், சீருடைகள் திட்டத்துக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு.
  • தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கீடு.
  • காவல்துறைக்கு ரூ,6,102.95 கோடி நிதி ஒதுக்கீடு.
  • காவல்துறையை கணினிமயமாக்க ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு.
  • இலங்கை அகதிகளுக்காக ரூ.105.98 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ,396.74 கோடி ஒதுக்கீடு.
  • தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.703.16 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.7.155 கோடி நிதி ஒதுக்கீடு.
  • இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயத்தைக் காக்க ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மாநில தொழில் கூட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.2,104.49 கோடி ஒதுக்கீடு.
  • வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.652.78 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அனைவருக்கும் கல்வி (சர்வ ஷிக்ச அபியான்) திட்டத்துக்கு ரூ.2,329.15 கோடி நிதி ஒதுக்கீடு.

மேலும், வரி ஏதுமற்ற பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பட்ஜெட்டில், வரி விதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே இது வரியற்ற பட்ஜெட்டாக அமைந்தது.

English summary
TN gvt submit Tax free budget 2016-17 on Thursday in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X