For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறங்கு முகத்தில் பிற கட்சிகள்.. இனி தமிழக அரசியல் ஸ்டாலின் vs சசிகலா மட்டும்தானா?

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடுவேதான் இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் நகர உள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியல் இனி ஸ்டாலின் மற்றும் சசிகலாவை சுற்றியே நகர உள்ளது.

திமுகவின் செயல் தலைவராக முடிசூடியுள்ளார் மு.க. ஸ்டாலின். நீண்ட காலம் திமுகவுக்காக உழைத்தவர் என்ற அடிப்படையில் அவரது தேர்வை குறை சொல்வார் யாருமில்லை.

மகன் என்பதற்காக ஸ்டாலினை கருணாநிதி வளர்த்து விடுகிறார் என்று குற்றம்சாட்டியவர்கள்கூட, ஸ்டாலினை தவிர கட்சியை காக்க யாருமே இல்லை என கூறத்தொடங்கும் நிலையில்தான் இந்த பதவிக்கு அவர் வந்துள்ளார்.

 கருணாநிதி ஆசி

கருணாநிதி ஆசி

இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், கட்சி தலைவர் கருணாநிதி பங்கேற்காவிட்டாலும் கூட, அவரது ஆசியுடன் ஸ்டாலின் செயல் தலைவர் ஆக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் தலைமையை ஏற்க மறுப்போர் இப்போது திமுகவில் யாரும் இல்லை. இப்போது இருப்பது அண்ணா காலத்து திமுகவோ அல்லது, கருணாநிதி காலத்து திமுகவோ கிடையாது. இது முழுக்க ஸ்டாலின் காலத்து திமுக.

 சசிகலா காலம்

சசிகலா காலம்

இதேபோலத்தான் அதிமுகவில் ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, இப்போது பொதுச் செயலாளராகியுள்ளார். அக்கட்சியிலும் எதிர்த்து நிற்போர் யாருமில்லை. ஆட்சியை கூட விட்டுத்தர முந்திக்கொண்டு நிற்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

 ஒதுங்கும் கருணாநிதி

ஒதுங்கும் கருணாநிதி

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த கருணாநிதி, சசிகலாவுக்கு எதிராகவும் அறிக்கைவிட்டபடி இருப்பார் என எதிர்பார்க்க முடியாது. அதை அவரே விரும்பினாலும் திமுக தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே இனிமேல் ஸ்டாலின் vs சசிகலா என்பதுதான் தமிழகத்தின் அரசியல்.

 பிறகட்சிகள் வீக்

பிறகட்சிகள் வீக்

தேமுதிக, மதிமுக, பாமக, நாம் தமிழர், பாஜக என பிற கட்சிகள் தமிழகத்தில் பலமிழந்துள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு வந்த சிறு கட்சிகளுடன் சமரசம் செய்யாமல் தனது நிலையில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். எனவே பிற கட்சிகள் இன்று பேரம் பேசும் அந்தஸ்தை இழந்துவிட்டன. இப்போது சட்டசபையில் அதிமுக மற்றும் திமுகதான் தனிப்பெரும் கட்சிகளாக உள்ளன.

 யதார்த்தம்

யதார்த்தம்

யதார்த்த சூழலில், ஸ்டாலின் மற்றும் சசிகலா நடுவேதான் போட்டி என்பது காலத்தின் கட்டாயம். எங்கள் கட்சிதான் பெரிய கட்சி என எல்லோரும் கூறலாம். ஆனால் அதன் அளவுகோல் தேர்தல் என்பதை மறுக்க முடியாது. தேர்தல்களில் தொடர்ந்து பிற கட்சிகள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், திமுகவின் ஸ்டாலினா அல்லது, அதிமுகவின் சசிகலாவா இவர்களில் யார் அரசியலில் அடுத்தகட்ட வெற்றி பெறுவார்கள் என்பதை வருங்காலமே சொல்ல வேண்டும்.

English summary
Tamilnadu politics become Stalin vs Sasikala war as no other parties is have stuff in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X