தென்காசி அம்சாவை சிக்க வைத்த 26 வீடியோக்கள்.. ஆண் நண்பர் சென்ற தோட்டத்தில் பயங்கரம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி பண்பொழி அருகே நடந்த இந்த சம்பவத்தில், முதலில் கொலை செய்யப்பட்டவர் யார் என்பதே போலீசாருக்கு தெரியவில்லை... ஆனால் சாலையிலிருந்த 26 சிசிடிவி கேமராக்களையும் உற்று பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது.. என்ன தான் நடந்தது தென்காசியில்?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த 10-ம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்தது.. உடம்பெல்லாம் பலத்த காயங்கள் காணப்பட்டன..

Tenkasi Crime Amsa News CCTV Evidence

அவர் யார், எதற்காக அங்கு வந்தார், அவரை தாக்கியது யார் என தெரியவில்லை.. இதையடுத்து இலத்தூர் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்காகவே தனிப்படையும் அமைக்கப்பட்டது.

தென்காசி அப்துல் ரகுமான்

விசாரணையில் பெரிதாக எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. பிறகு அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராக்களை ஆராய துவங்கினர்.. அங்கே கிடைத்த ஒரு துப்பு, தென்காசி சாலையில் இருந்த 26 கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ய வைத்தது.. அதில் சந்தேகப்படும் வகையில் ஒரு கார் அந்தப் பகுதியில் 2 முறை வந்து சென்றது தெரியவந்தது. அந்த காரின் பதிவு நம்பரை வைத்து விசாரித்தபோது, அது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வாடகை கார் என்பது தெரியவந்தது.

அம்சாவின் கள்ளக்காதல்

அந்த காரில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அப்துல் ரகுமான் (50) என்பவரை, தென்காசி மாவட்டம் தைக்கா தெருவை சேர்ந்த இசை இந்திரகுமார் (36) என்பவர் பண்பொழி பகுதிக்கு அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இசை இந்திரகுமாரை பிடித்து போலீசார் விசாரித்தபோதுதான், இந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

அதாவது, அப்துல் ரகுமான் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடைகளுக்கு பயன்படுத்தப்படும் ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு அம்சா நிஷா (43) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.. இந்த நிலையில், அதே பகுதியில் இசை இந்திரகுமார் வேலை பார்த்த ஓட்டலுக்கு அப்துல் ரகுமான் தனது குடும்பத்துடன் அடிக்கடி சாப்பிட போவாராம்.. அப்போதுதான் இந்திரகுமாருக்கும் அம்சா நிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறி விட்டது..


கடுப்பான அம்சா

இதற்கு நடுவில், அப்துல் ரகுமான் கொஞ்ச நாளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. கணவர் வீட்டிலேயே இருப்பது அம்சாவுக்கு எரிச்சலை தந்துள்ளது.. இதனால் தங்களால் ஜாலியாக இருக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுள்ளார்.. கடைசியில், கணவரை கொன்று விடலாம் என்று அம்சா நிஷா, இசை இந்திரகுமாரிடம் சொல்லி உள்ளார் .. அதற்கு பிறகே இந்த கொலை திட்டம் ரெடியாகி உள்ளது..

அதன்படி கடந்த 10-ம் தேதி, பண்பொழி-தென்காசி சாலையில் உள்ள தனது நண்பரின் தோட்டத்தில் பம்புசெட் கட்டிடத்துக்கு ரோலிங் ஷட்டர் அமைக்க வேண்டும் என்று கூறி, அப்துல் ரகுமானை இசை இந்திரகுமார் வாடகை காரில் அழைத்து சென்றிருக்கிறார்.. அவர்களை அங்கு இறக்கிவிட்ட டிரைவர் காரை எடுத்துச் சென்றுவிட்டாராம்..

பிறகு ரோலிங் ஷட்டர் அமைக்க வேண்டிய இடத்தை அளந்து கொண்டிருந்தபோது, அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் அப்துல் ரகுமானின் தலையின் பின்பகுதியில் இந்திரகுமார் ஓங்கி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ரகுமான் மீது, ஒரு பெரிய கல்லை தூக்கிப் போட்டுள்ளார், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.. இதற்கு பிறகு இந்திரகுமார் அங்கிருந்து நடந்து சென்று பஸ்சில் ஏறி தப்பிச் சென்று விட்டாராம்..


26 சிசிடிவி கேமராக்கள்

இவ்வளவும் விசாரணையில் வெளியான நிலையில், இசை இந்திரகுமார், அம்சா நிஷா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இசை இந்திரகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், அம்சா நிஷா கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்..

அம்சாவும், காதலனும் இந்த கொலையை நடத்தியபோது அந்த பகுதியில் நடமாடியது, அங்கிருந்த மொத்தம் 26 சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது.. இந்த 26 சிசிடிவி கேமராக்கள்தான் இந்த தென்காசி வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+