இந்த முறை துணை முதல்வர் பதவியாவது கிடைக்குமா? இலவு காத்த கிளியாக தங்கதமிழ்ச்செல்வன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  18ல் ஒருவரை முதல்வராக்க திட்டம் - கனவில் ஆதரவாளர்கள் | Oneindia Tamil

  சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் போர்க்கொடி பிடித்த போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கனவில் மிதந்தார் தங்கதமிழ்ச்செல்வன். ஆனால் அது கானல் நீராகவே தற்போது 18 எம்எல்ஏக்களில் ஒருவர் தான் முதல்வர் என்று தினகரன் கூறி இருப்பதால் துணை முதல்வர் கனவில் மிதந்து வருகிறாராம் தங்கதமிழ்ச்செல்வன்.

  அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவின் பாணி என்னவென்றால் ஒரு மாவட்ட பிரதிநிதி பெரிய அளவில் வளர்ச்சி பெற்றால் அவருக்கு எதிரான ஒரு ஆளையும் வளர்த்துவிடுவார். இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன.

  நத்தம் தொகுதியில் தொடர் வெற்றிகளை சந்தித்து வந்தவர் ஜெயலலிதா ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன். ஆனால் 2016 தேர்தலில் நத்தம் விஸ்வநாதனை ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்து அவரை டம்மியாக்கினார் ஜெயலலிதா. இதற்கு நத்தம் விஸ்வநாதனும், ஐ.பெரியசாமியும் அரசியலைத் தாண்டி நட்பு பாராட்டியதும் ஒரு காரணமாக அப்போது சொல்லப்பட்டது.

  ஜெயலலிதாவின் அரசியல்

  ஜெயலலிதாவின் அரசியல்

  நத்தம் விஸ்வநாதனை டம்மியாக்கியதோடு திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சராக்கினார். இதே போன்று சட்டசபை தேர்தலில் திவாகரன் அணியால் தோல்வியை சந்தித்த வைத்திலிங்கத்தை ராஜ்யசபா எம்பியாக்கினார் ஜெயலலிதா.

  கணக்கு போட்ட தங்கத்தமிழ்ச்செல்வன்

  கணக்கு போட்ட தங்கத்தமிழ்ச்செல்வன்

  பதவியில் இருப்பவர்களை தோற்கடித்து டம்மியாக்குவதும், டம்மியாக இருப்பவர்களை தூக்கிவிடுவதும் ஜெயலலிதாவின் அரசியல் பாணியாக இருந்தது. இந்த பாணியில் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தால் முதல்வர் பழனிசாமி அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம் பார்த்து வந்த பொதுப்பணித்துறை கிடைக்கும் என்று கனவு கண்டார் தங்கதமிழ்ச்செல்வன்.

  ஆசை நிறைவேறவில்லை

  ஆசை நிறைவேறவில்லை

  ஆனால் கடைசி வரை தங்கதமிழ்ச்செல்வனின் ஆசை நிறைவேறவில்லை. இதனால் அதிருப்தியோடு தான் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மனு அளித்தாராம். தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதன் பின்னணியும் இதுவே என்று சொல்லப்படுகிறது.

  துளிர் விடும் துணை முதல்வர் ஆசை

  துளிர் விடும் துணை முதல்வர் ஆசை

  தற்போது 18 எம்எல்ஏக்களில் ஒருவருக்குத் தான் முதல்வர் பதவி என்று தினகரன் கூறி இருப்பதால் மீண்டும் முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவியாவது கிடைக்கும் என்ற ஆசையில் இருக்கிறாராம் தங்கதமிழ்ச்செல்வன். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கு வேட்டு வைத்து அந்த இடத்தை கைப்பற்றி விடலாம் என்ற கனவில் இருக்கிறாராம் ஆண்டிப்பட்டிக்காரர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Aandipatti MLa's minister dream has failed but after Dinakaran's announcement about who is Cm, Thangatamizhselvvan dreaming over Deputy CM posting.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற