For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகதிகள் முகாமில் மத்திய குழு திடீர் ஆய்வு.. கலக்கத்தில் அதிகாரிகள்!

நெல்லையில் உள்ள அகதிகள் முகாமில் மத்திய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: அகதிகள் முகாமில் மத்திய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழகம்முழுவதும் உள்ள அகதிகள் முகாமை மத்திய குழுவினர் திடீரென பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் ஒரு பிரிவினர் மாலை நெல்லை மாவட்டம் ரெங்கபுரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

The central officials inspection in the refugee camp at Nellai

மேலும் அங்கு வசிக்கும் அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது அகதிகள் அளித்த மனுவில், இலங்கை செல்லும் மக்களுக்கு அவர்களின் உடைமைகளை கொண்டு செல்வதற்கு கப்பல் போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

இலங்கைக்கு திரும்பும் அகதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மறுவாழ்வு ஆதாரத்தை இலங்கை-இந்திய அரசுகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். இந்தியாவில் வசிக்க விரும்பும் மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இங்கு வசிக்கும் மக்களுக்கு வீட்டிற்கு ஒரு கழிப்பிடம் அமைக்க நிதி உதவி வழங்க வேண்டும். சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் வசதி செய்து தர வேண்டும்.

இதில் 84 குடும்பங்கள் வசித்து வருகிறது. இவர்களில் 70 வீடுகள் அரசால் கட்டி தரப்பட்டவை. மீதமுள்ள 14 குடும்பத்திற்கு கூடங்குளம் அணு மின் நிலைய திட்ட நிதி உதவியுடன் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் இடுகாடு வசதி செய்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இந்த திடீர் ஆய்வால் மாநில அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

English summary
The central officials inspection in the refugee camp at Nellai. The State authorities are scared of sudden visit by the central team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X