சுங்கத்துறையிடம் இருந்த செம்மரக்கட்டைகளை எடுத்துவிட்டு வைக்கோலை வைத்த கும்பல்.. பலே திருட்டு
தூத்துக்குடி: சுங்கத்துறை பாதுகாப்பில் இருந்த செம்மரக்கட்டைகளை எடுத்து விட்டு வைக்கோலை வைத்த மர்ம நபர்களை சுங்கத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 15 டன் செம்மரக்கட்டைகள் மத்திய வருவாய் புனலாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை பெரிய கண்டெய்னர்களில் அடைத்து சீல் வைத்து துறைமுக பைபாஸ் ரோட்டில் சுங்கத்துறைக்கு சொந்தமான டெர்மினலில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்த செம்மரங்கள் கடத்தல் தொடர்பாக கோர்டில் வழக்கு நடந்து வருவதால் அடிக்கடி அதிகாரிகள் அதனை சோதனை செய்து வந்தனர். இந்நிலையில் கோர்ட்டில் வழக்கு முடிந்ததால் செம்மரக்கட்டைகளை ஏலம் விட கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து மாலை சீல் வைக்கப்பட்ட கன்டெய்னர்கள் சுங்கதுறை அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டது. ஆனால் சீல் வைக்கப்பட்ட கன்டெய்னரில் சீல் வேறுவிதமாக இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சீலை உடைத்து பார்த்த போது கன்டெய்னிரில் செம்மரக்கட்டைகளுக்கு பதிலாக வெறும் வைக்கோல் இருந்தது. இதை பார்த்து அதிர்ந்த சுங்கதுறை அதிகாரிகள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து விசாரணை நடத்தியதில் கடந்த இரண்டு மாதங்களாகவே இந்த நூதன திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்னர் என தெரிய வந்துள்ளது.
சிசிடிவி கேமரா இயக்கம் நிறுத்தப்பட்டு திருடப்பட்டுள்ளதால் தனியார் டெர்மினல் ஊழியர்கள் மீது சுங்கதுறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த டெர்மினலுக்கு அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அங்கு மேல் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications