For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயிலுக்கு அடியில் சிக்க இருந்த 8மாத குழந்தை தாய், நொடியில் காப்பாற்றிய ஆய்வாளர், திக்திக் நிமிடங்கள்

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த குழந்தையையும், தாயையும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.

Recommended Video

    ரயிலுக்கு அடியில் சிக்க இருந்த 8மாத குழந்தை தாய், நொடியில் காப்பாற்றிய ஆய்வாளர், திக்திக் நிமிடங்கள்

    மயிலாடுதுறை ரயில் நிலையம் டெல்டா மாவட்டங்களில் மிக முக்கிய ரயில் நிலையமாக கருதப்படுகிறது. பழமை வாய்ந்த அந்த ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்களும், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சமீபகாலமாக ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய முயற்சிப்பது அல்லது ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கும் போது தவறி விழுந்தவர்களை பணியில் இருக்கும் காவலர்கள், ரயில்வே பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து காக்கும் நிகழ்வுகள் அதிகமாய் நடைபெற்று வருகிறது. அதே போல 8 மாத குழந்தையுடன் தாயை காவல் ஆய்வாளர் ஒருவர் மீதுள்ள சம்பவம் மயிலாடுதுறையில் நடைபெற்றுள்ளது.

    மெட்ரோ ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு.. ரயில் முன் பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்.. திக்திக் சிசிடிவி காட்சிகள்மெட்ரோ ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு.. ரயில் முன் பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்.. திக்திக் சிசிடிவி காட்சிகள்

    மயிலாடுதுறை ரயில் நிலையம்

    மயிலாடுதுறை ரயில் நிலையம்

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களம் . இவர் இன்று மதியம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்புவதற்காக அவரது மகள்கள் தையல்நாயகி, கவிதா தனது 8 மாத குழந்தை ஆகியோர் உடன் வந்துள்ளனர்.

    ரயில் புறப்பட்டதால் தடுமாற்றம்

    ரயில் புறப்பட்டதால் தடுமாற்றம்

    மங்களத்தை ரயிலில் ஏற்றி இருக்கையில் அமர வைத்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ரயில் புறப்பட்டதைக் கண்டு சகோதரிகள் இருவரும் அவசரமாக ரயிலை விட்டு கீழே இறங்கினர். கவிதா தனது குழந்தையுடன் கீழே இறங்கும் போது தடுமாறி விழுந்துள்ளார். இதன் காரணமாக இருவரும் ரயிலில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பதற்றத்தில் கவிதாவின் குழந்தை அலறி அழதது.

    உயிரைக் காப்பாற்றிய ஆய்வாளர்

    உயிரைக் காப்பாற்றிய ஆய்வாளர்

    குழந்தை மற்றும் தாயின் அலறல் சத்தம் கேட்டு, அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக்கொண்டு, ஓடிச்சென்று நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த கவிதாவையும், அவரது 8 மாத குழந்தையையும் தனது கால்களால் தாங்கிப் பிடித்து எந்தவித காயமும் இன்றி காப்பாற்றினார்.

    போலீசாருக்கு பாராட்டு

    போலீசாருக்கு பாராட்டு

    இதில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமாருக்கு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதிர்குமார், உதவி ஆய்வாளர்கள் தனசேகரன், துரைசிங்கம், காவலர் அருள்குமார் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தன் உயிரைப் பணயம் வைத்து தாய், குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமாரின் சமயோஜித செயலுக்கு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    English summary
    The Railway Security Force inspector who saved the life of a child and his mother who fell off a train at Mayiladuthurai railway station has been praised by all.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X