கயவர்கள் எங்கும் இருக்கலாம்!….கவனம் தேவை!!: எச்சரிக்கை ரிப்போர்ட்
இன்றைக்கு ஊடகங்களில் அதிகம் வெளியாகும் செய்தி சிறு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்தான். பச்சிளம் குழந்தைகள் முதல் 10 வயது சிறுமிகள் வரை அதிகம் பலியாகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் வேலூர் அருகே மூன்று வயது சிறுமியை நாசமாக்கியுள்ளான் 55 வயது காமுகன். பக்கத்து வீட்டில் வசித்த மளிகைக்கடைக்காரன்தான் அந்த படுபாதகச் செயலைச் செய்தவன் என்று தெரிய
வந்த உடன் உடனடியாக அவன் மீது போலீசில் புகார் அளித்தனர் சிறுமியின் பெற்றோர. ஆனாலும் அந்த கயவன் தலைமறைவாகிவிட்டான்.
வேலூர் சிறுமி மட்டுமல்ல தமிழகத்திலும், இந்தியா முழுவதும் இதுபோல் எண்ணற்ற குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர்.
70 சதவிகித பாலியல் வன்முறைகள் நன்கு அறிந்தவர்கள் மூலம்தான் குழந்தைகளுக்கு நடைபெறுகிறது என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

நடிகை பாதிப்பு
நடிகை பூ பார்வதி கூட சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிறு வயதில் நானும் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சிறார்களை குறிவைத்து
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ முழுக்க முழுக்க சிறார்களை ுறிவைத்தே இது நடத்தப்படுகிறது. எத்தனை குழந்தைகள் இதனை பெற்றோர்களிடம் தெரிவிக்கின்றனர். எத்தனை பெற்றோர்கள் குழந்தைகள்
கூறுவதை காது கொடுத்து கேட்கின்றனர் என்பதே இங்கே கேள்வியாக உள்ளது.
சிறுவனின் செய்கை
சமீபத்தில் யு டுயூப்பில் வெளியான குறும்படம் ஒன்று இதுபோன்ற சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அந்த குறும்படத்தின் துவக்கத்தில் கணவனும் மனைவியும் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டே தன் மகனோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் மகன் சற்றே தூரமாய் அமைதியாய் நின்று
கொண்டிருக்கிறான்.
சைகையில் உணர்த்திய சிறுவன்
சைகை மொழியில் பெயரைக் கண்டுபிடித்து (டம்ப் ஷரட்ஸ்) விளையாடும் பழக்கம் கொண்ட அந்தக் குடும்பத்தினர் தங்கள் மகன் செய்யும் சமிக்ஞையை வைத்து அதுவா? இதுவா? என ஆர்வத்துடன் கேட்கின்றனர்.
இல்லாத மீசையை முறுக்குவதாய்ச் சிறுவன் பாவலா காண்பிக்க 'மாமனார் - மருமகன்' என்ற அர்த்தம் கொண்ட படமொன்றைச் சொல்கின்றனர் பெற்றோர். அப்படியில்லை என்று மறுக்கும் சிறுவன், அதல் முதல்
வார்த்தை மட்டும் என்கிறான்.
மாமாவின் செயல்
மாமாவா எனக் கேட்க ஆமாம் என்கிறான். அடுத்த வார்த்தை என்னவென்று அவர்களும் ஆர்வமாய்க் கேட்கின்றனர். தன் மீதே கைவைத்துக் கொள்ளும் சிறுவனைப் பார்த்து என்ன என்ன என்று பரபரக்கின்றனர். ஒரு
வழியாய் மகன் தன்னைத்தானே குறிப்பிடுகிறான் என்பது அவர்களுக்குப் புரிகிறது.
அதிர்ச்சியளிக்கும் உண்மை
முதல் வார்த்தை மாமா, இரண்டாவது என்னை, மூன்றாவது வார்த்தையில் என்ன இருக்கும் என யோசிக்கின்றனர். சிறுவனின் உடல்மொழி அந்தப் பெற்றோருக்கு மட்டுமல்ல... நமக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. நம்
அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வை ஊட்டும் குறும்படம் அது.
என்னைத் தொடாதே
ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுகை எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
கவனம் தேவை
குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
வாகன ஓட்டுனர்கள்
பெரும்பாலான தவறுகள் வாகன ஓட்டுநர்களாலேயே நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கம் பற்றியும் அறிந்து கொள்வத அவவசியம்,
பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட..
அலட்சியம் வேண்டாம்
அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள்,
ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!
குழந்தைகளுடன் செலவிடுங்கள்
யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள். குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்












Click it and Unblock the Notifications