துப்புரமணி... துப்பாத நீ... எச்சில் துப்புவதை எதிர்க்கும் பாடல்
சென்னை: ரயில் நிலையம், பேருந்து நிலையம், சாலைகள், பொது இடங்கள் என எங்கே பார்த்தாலும் எந்த கவலையும் இன்றி எச்சில் துப்புபவர்களை பார்த்திருப்போம். பலரும் பான்பராக், வெற்றிலை போட்டு துப்பி வெள்ளை சுவருக்கு சிவப்பு சாயம் பூசியிருப்பார்கள். இப்படி எச்சில் துப்பும் மனிதர்களை கிண்டலடித்து ஒரு பாடல் பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார் அர்ச்சித் என்ற இளைஞர்.

இவர் நடிகர் மதன் பாபுவின் மகன் என்பது கூடுதல் தகவல். கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை கூறும் வகையில் அமைந்துள்ளது இந்தப் பாடல்.
பொது இடங்களில் எச்சில் துப்புவதால் சுகாதார கேடு ஏற்படுவது மட்டுமின்றி,அதனை தெரியாமல் மிதித்துச் செல்பவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்ற கருத்தை வலியுறுத்துகிறது "துப்புர மணி...துப்பாத நீ.." என்ற பாடல்.
சமூக வளைதளங்கள் வெறும் அரட்டை அடிப்பதற்கு மட்டுமே என பலர் நினைத்து வரும் நிலையில்,தனது பாடலை சமூக வளைதளத்தில் வெளியிட்டு பலரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் அர்சித். அந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.
அடுத்ததாக குடித்துவிட்டு வாகனம் ஒட்டுறவங்கள பற்றிய வீடியோவுக்கு தயாராகி வருவதாக கூறும் அர்ச்சித், மத்திய அரசோடு இணைந்து இதோட இந்தி வெர்ஷன் பண்ற வேலைகள்லயும் இறங்கியிருக்கோம் என்கிறார். இனி பொது இடத்தில் துப்பும் முன் கொஞ்சம் யோசிங்க மக்களே!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications