தென்காசியே திணறிடுச்சு.. கருவறைக்குள் அம்மன் தாலியை "தொட்ட" பெண்.. என்னாச்சு பாருங்க.. கடையநல்லூரில்
தென்காசி: கடையநல்லூர் பகுதியே ஆடிப்போயிருக்கிறது.. யார் அந்த பெண் என்று தெரியவில்லை.. அவரைத்தான் காவல்துறையினர் தேடி கொண்டிருக்கிறார்கள்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் பிரபலமான காளியம்மன் கோவில் உள்ளது.. இந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் இல்லாமல், வெளியூர்களில் இருந்தும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் தினமும் வந்து செல்வார்கள்.

ஆடி மாதம்: ஆடி மாதம் என்பதால், கூட்டம் வழிந்து நிறைந்து கொண்டிருக்கிறது.. இந்த கோயிலுக்கு பக்கத்திலேயே கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது... இங்கு வரும் பக்தர்கள், அந்த அம்மன் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு போவார்கள்..
இந்த கோயில், பூசாரி தினமும் கோயில் நடை திறந்து வைப்பது வழக்கம்.. இந்நிலையில், நேற்று காலை, இந்த கோயிலுக்கு ஒரு பெண் வந்துள்ளார்.. 10 மணிக்கு மேல் என்பதால், கோயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. அதுவும் இந்த பெண் கோயிலுக்கு வந்த நேரம், அங்கு யாருமே இல்லை.. இதனால், சிறிது நேரம் நின்று சாமி கும்பிட்ட பெண், திடீரென கோவில் கருவறைக்குள் நுழைந்தார்..
சிலைகள்: அங்கு அம்மன் சிலையின் அருகில் சென்றார்.. பிறகு திடீரென அம்மன் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை திருடிவிட்டார்.. பிறகு, அங்கிருந்து அதே பகுதியிலுள்ள இன்னொரு கோயிலுக்கு போனார்.. அந்த கோயிலிலும் அம்மனின் கழுத்தில் இருந்த தாலியை திருடிவிட்டு கிளம்பினார்.

சிறிது நேரம்கழித்து, அம்மனுக்கு பூஜை செய்ய பூசாரி வந்துள்ளார்.. அம்மனின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.. பிறகு உடனடியாக ஊர் நாட்டாமை செல்வகுமார் மற்றும் கடையநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தார்.. கடையநல்லூர் போலீஸாரும், விரைந்து வந்து, கோயில் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர்..
பக்திமான்: அந்த பெண் சங்கரன்கோவிலை சேர்ந்தவராம்.. இப்படி திருடுவதற்காகவே, தனியார் பஸ்ஸில் ஏறி, மாவடிகால் பகுதியில் இறங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில், அவரது முகம் பதிவாகி உள்ளது.. கையில் ஒரு காய்கறி கூடை வைத்திருக்கிறார்.. முகமெல்லாம் மஞ்சள் பூசி, நெற்றி நிறைய விபூதி, குங்குமம் என பக்திபழமாய் காட்சி தருகிறார்.. ஆனால், 60 ஆயிரம் மதிப்புடைய தாலியை அபேஸ் செய்துவிட்டார்.. இந்த பக்தையைதான் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications