அமைச்சர்கள் திடீர் ஆலோசனை... அதிமுக அணிகள் இணைய வாய்ப்பு உள்ளது: வைகை செல்வன் ஆரூடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்புகள் உள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது பற்றி பேச்சு வார்த்தைக்கு வந்தால் அமர்ந்து பேசத் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் கூறியுள்ளார்.
இதனிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் இருமுறை ஆலோசனை நடத்திய தம்பிதுரை இந்த கருத்தை வரவேற்றார்.

There is an opportunity to join ADMK's two team, says Vaigaiselvan

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள் கலந்து கொண்டு ஒரு மணி நேரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் அதிமுகவின் இணைப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவிக்கையில், அமைச்சர்களின் கூட்டம் இயல்பானதாக இருக்கும். இந்த சந்திப்பில் அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK spokesperson Vaigai Selvan says, there may be chance to join ADMK's two teams together.
Please Wait while comments are loading...