திமுகவை போல் அதிமுகவில் குடும்ப அரசியல் கிடையாது... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவைப் போல் அதிமுகவில் குடும்ப அரசியல் கிடையாது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஆகலாம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், அது நடக்காது என்றும் தம்பிதுரை கூறினார்.

அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த சில நாட்களாக தம்பிதுரைக்கு அதிமுக எம்எல்ஏக்களும் எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் பேசி வருவதகாக கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் ஆதரவாக பேசினார்.

5 ஆண்டுகள நிறைவு செய்யும்

5 ஆண்டுகள நிறைவு செய்யும்

விமான நிலையத்தில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் தேர்தல் வரும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளை அதிமுக அரசு நிறைவு செய்யும் என்றும் தம்பிதுரை உறுதியாக கூறினார்.

திமுக போல் குடும்ப அரசியலில்லை

திமுக போல் குடும்ப அரசியலில்லை

அதனால் ஸ்டாலின் நினைப்பது நடக்காது என்ற அவர் ஸ்டாலின் முதல்வராகலாம் என பகல் கனவு காண்கிறார் என்றும் சாடினார். திமுகவை போல் அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை என்ற அவர் அதிமுக ஜனநாயக முறைப்படி செயல்பட்டு வருகிறது என்றார்.

அமைச்சர்களுக்கு தெரியும்

அமைச்சர்களுக்கு தெரியும்

அரசை எப்படி வழிநடத்த வேண்டும், கட்சியை எப்படி நடத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு தெரியும் என்றும் தம்பிதுரை கூறினார். பிரதமர் கேட்டுக் கொண்டதாலும், ஏழை மக்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக அவர் கூறினார்.

அமைச்சர்களுக்கு உரிமை உண்டு

அமைச்சர்களுக்கு உரிமை உண்டு

அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் அவர்களது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட உரிமை உண்டு என்றும் தம்பிதுரை கூறினார். சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக பேசியதற்கு அதிமுக எம்பிக்களும் எம்எல்ஏக்களும் தம்பிதுரைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கும், எம்பிக்களும் ஆதரவாக தம்பிதுரை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK MP Thambidurai said that there is no family politics in the ADMK like DMK. Stalin dreaming to be the chief minister and it will not happen, said Thambidurai.
Please Wait while comments are loading...