கொழுந்தியாளை "தூக்கிய" அத்தான்.. விருந்து முடிஞ்சதுமே "மாமியார்" வீடு போன மாப்ளை.. நெல்லை போலீஸ் மாஸ்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கொழுந்தியாள் மீது நீண்ட நாட்களாகவே ஒரு கண் இருந்துள்ளது.. அத்துமீறிய மாப்பிள்ளை, இப்போது 'மாமியார்' வீட்டுக்கு போயுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் ஒரு சம்பவம் நடந்தது.. இங்குள்ள தம்பதி மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.. பிறகு, ஒருநாள், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்கு தன்னுடைய கணவரை அழைத்து வந்தார் மனைவி.

Thirunelveli incident and what happened to Thoothukudi 17 year old Minor girl

அப்போதுதான், மனைவியின் தங்கை மீது, கணவருக்கு தவறான பார்வை விழுந்தது.. இந்த தங்கை ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். தினமும் அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்துபோயுள்ளார்.. நாளடைவில் இந்த பெண்ணையே திருமணமும் செய்ய ஆசைப்பட்டார். இதற்காக ஆசை பட பாணியில், மனைவியையும் கொன்றுவிட்டார்.

ரிப்போர்ட்: மாரடைப்பில் மனைவி இறந்துவிட்டதாகவும், தூக்கத்திலேயே உயிர் போய்விட்டதாகவும் சொல்லி எல்லாரையும் நம்ப வைத்தார்.. கதறி கதறி அழுதவரை பார்த்து, மொத்த குடும்பமும் கண்ணீர் வடித்தது.. பிறகு, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், கழுத்திலிருக்கும் மூச்சுக்குழாய் உடைந்து, அதனாலேயே மனைவி இறந்துவிட்டதாக கூறப்பட்டது. இதற்கு பிறகுதான், குடும்பத்தினர் போலீசுக்கு ஓடிச்சென்று, மரணத்தில் சந்தேகம் என்று சொன்னார்கள்..

கணவரை பிடித்து விசாரித்ததில், கொழுந்தியாள் மீதுள்ள மோகத்தினால், மனைவியின் கழுத்தை கயிறால் இறுக்கி கொன்றுவிட்டதாக வாக்குமூலம் தந்தார்.. பிறகு மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவ அதிர்ச்சியே முடியாத நிலையில், இதோ இன்னொரு கொழுந்தியாள் பலிகடாவாகி உள்ளார்.

9 மகள்கள்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நடுவக்குறிச்சி தெற்குராமசாமிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்வேல்.. இவருக்கு 55 வயதாகிறது.. 9 மகள்கள் இருக்கிறார்கள்.. இதில் 7 பேருக்கு கல்யாணமாகிவிட்டது.. இன்னும் 2 பேருக்கு திருமணமாகவில்லை..

9 மகள்களில் மூத்த பெண், திசையன்விளையில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார்.. இந்த வீட்டுக்கு, கிரகப்பிரவேசம் நடத்த முடிவு செய்து, குடும்ப உறுப்பினர்கள், சொந்த பந்தங்கள் என ஊரையே அழைத்துள்ளார்.. அந்தவகையில், மகளின் புதுமனைபுகுவிழாவுக்கு செந்தில்வேல், திருமணமாகாத தன்னுடைய 2 மகள்களையும் அழைத்து வந்திருந்தார்.

விருந்து: இல்லத்திருவிழா தடபுடலாக நடந்து முடிந்தது.. மதியம் அனைவருமே விருந்து சாப்பிட்டார்கள்.. சாப்பிட்டு முடித்ததுமே, தன்னுடைய ஊருக்கு கிளம்ப தயாரானார் செந்தில்வேல்.. அப்போதுதான், தன்னுடன் வந்த 17 வயதான 9வது மகளை காணவில்லை என்பதை அறிந்தார்.. இதனால் பதறிப்போன செந்தில்வேல், அக்கம்பக்கம் வீடுகளுக்கு சென்று தேடினார்..

புது இடத்தில் எங்காவது வழிதெரியாமல் தொலைந்து போயிருப்பாரோ? என்று பயந்துகொண்டு, திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தன்னுடைய கடைசி மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் தந்தார். இதையடுத்து, போலீசாரும் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடினர். அப்போதுதான், சொந்த வீட்டிலேயே நடந்த அக்கிரமம் தெரியவந்தது.. செந்தில்வேலின் மருமகனே, இப்படி ஒரு காரியத்தை செய்தது தெரியவந்தது..

மாமியார் வீடு: 4வது மகளின் கணவர் பெயர் ஜெயசீலன்.. விழாவில் எல்லாரும் விருந்து சாப்பிட்டுக்கொண்டு பிஸியாக இருந்தால், யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்து, கொழுந்தியாளை ஆசைவார்த்தை சொல்லி பக்கத்து ஊருக்கு கடத்தி சென்றுள்ளார்.. பாலியல் வன்மத்தையும் ஜெயசீலன் அரங்கேற்றியிருக்கிறார் என்பது உறுதியானது. கொழுந்தியாளை கடத்தி சென்று பாலியல் அக்கிரமத்தை செய்த 4வது மருமகன், இப்போது மாமியார் வீட்டில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+