For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலை: 8 வழி சாலை போராட்டத்தை பதிவு செய்த செய்தியாளர்கள் விசாரணைக்கு பின் விடுவிப்பு

திருவண்ணாமலையில் பசுமைவழி சாலை எதிர்ப்பு போராட்டத்தை பதிவு செய்த செய்தியாளர்கள் தடுக்கப்பட்டனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தியாளர்கள் விசாரணைக்கு பின் விடுவிப்பு | பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை- வீடியோ

    திருவண்ணாமலை: சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிரான போராட்டத்தை பதிவு செய்த கேரளா செய்தியாளர்கள் 2 பேர் போலீசாரால் தடுக்கப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

    8 வழி சாலைக்கு எதிரான போராட்டங்களை உடனுக்குடன் முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு முனைப்பு காட்டுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் விவசாயிகள் 8 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    Thiruvannamalai Police detain Mathrubhumi reporters

    இந்த எதிர்ப்பு போராட்டத்தை கேரளாவின் மாத்ருபூமி செய்தியாளர் அனூப் தாஸ் மற்றும் கேமரமா மேன் முருகன் ஆகியோர் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர்கள் இருவர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த உள்ளூர் நபர்கள் இருவர் என மொத்தம் 4 பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

    அங்கு நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் போலீஸ் தரப்போ, இப்போது எல்லோரும் கேமராவை கையில் வைத்திருக்கிறார்கள். யார் பத்திரிகையாளர்கள் என்பதே தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பிவிட்டோம் என விளக்கம் அளித்துள்ளனர்.

    English summary
    Mathrubhumi TV reporter Anoop Das and his cameraman has been detained by Thiruvannamalai police and later they were released.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X