சபரிமலையில் கார்த்திகை தீப விழா: ஜொலித்த சன்னிதானம்- படிபூஜைக்கு 2030 வரை முன்பதிவு
சென்னை: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சபரிமலையில் நேற்று மாலையில் தீபாராதனையின் போது விளக்குகள் ஏற்பட்டது. சன்னிதானத்தை சுற்றி கற்பூர தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் விளக்கேற்றி சரணகோஷ முழக்கமிட்டனர். இதபோல சபரிமலையில் உள்ள அலுவலகங்கள், கடைகள் அனைத்திலும் விளக்கேற்றப்பட்டிருந்தது.
சபரிமலையில் பதினெட்டாம் படி பூஜைக்கு 2030ஆம் ஆண்டுவரை முன்பதிவு முடிந்துவிட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டல பூஜை
கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வரும் மண்டல பூஜை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் குவிந்து வருகின்றனர்.இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மண்டல பூஜை
கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வரும் மண்டல பூஜை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் குவிந்து வருகின்றனர்.இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பக்தர்கள் கூட்டம்
கார்த்திகை தீபத் திருநாள், பவுர்ணமி, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுதலாக காணப்பட்டது.

ஜொலித்த சன்னிதானம்
கார்த்திகை தீபத்தை ஒட்டி ஏராளமான விளக்குகள் கோவிலில் ஏற்றப்பட்டன. இதனால் கோவில் சன்னிதானம் தீப ஒளியில் ஜொலித்தது. இதை காணவும், 18ஆம் படி ஏறவும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கோவிலில் பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு நாளான இன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நேற்று காலை முதலே கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சன்னிதானம் மற்றும் 18ஆம் படி ஏறும் முன்பு பக்தர்கள் அனைவரும் பல கட்ட சோதனைக்குட்படுத்தப்பட்டனர். கமாண்டோ படை வீரர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.அவர்கள் துப்பாக்கிகளுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கட்டுபடுத்தப்பட்ட கூட்டம்
தீவிர பாதுகாப்பினை முன்னிட்டு நேற்றிரவு முதல் பக்தர்கள் கூட்டம் சற்று குறைய தொடங்கியது. இன்று காலையிலும் அது நீடித்தது. இன்று பிற்பகலுக்கு மேல் கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிபூஜை, உதயாஸ்தனமன பூஜை
சபரிமலை வரும் பக்தர்கள் ஐயப்பனுக்கு காணிக்கை செலுத்துவதோடு அங்கு நடக்கும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜைகளும் செய்வது உண்டு. படி பூஜைக்கு ரூ.40 ஆயிரமும், உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.25 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2030 வரை முன்பதிவு
கோவில் நடைதிறந்திருக்கும் நாட்களில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை செய்ய கோவில் நிர்வாகத்திடம் பணம் கட்டி பக்தர்கள் முன் பதிவு செய்திருக்க வேண்டும். கோவிலின் இன்றைய நிலவரப்படி, சபரிமலையில் பக்தர்கள் படி பூஜை செய்ய வருகிற 2030-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம்தேதி வரை முன்பதிவு முடிந்து விட்டது. இனி பதிவு செய்பவர்கள் 2030 அக்டோபருக்கு பிறகுதான் படி பூஜை செய்ய முடியும்.

2022 வரை உதயாஸ்தமன பூஜை
இதுபோல உதயாஸ்தமன பூஜைக்கு வருகிற 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம்தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த காலக்கட்டத்தில் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டால், அதற்கான கூடுதல் கட்டணத்தை பக்தர்கள் செலுத்தி படி பூஜை நிறைவேற்றி கொள்ளலாம் எனவும் கோவில் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications