வெறுங்கையை வீசிக்கிட்டு எதுக்குடா வெளியே வர்றே? ஆத்திரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிய கொள்ளையர்
இளைஞரை வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியுள்ளனர்.
Recommended Video

சென்னை: கிரிமினல் குற்றமான வழிப்பழியை செய்கிறோம் என்ற வெட்கம், மானமும் மட்டுமல்ல, மனிதாபிமானமும் இல்லாத சம்பவம் தி.நகரில் நடந்துள்ளது.
வட மாநிலத்தை சேர்ந்தவர் பாலேஸ்வர் சிங் என்ற இளைஞர். இவர், தி.நகர் உஸ்மான் ரோடில் தங்கி அப்பகுதியிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு தன் வீட்டு பக்கமாக உள்ள கடைக்கு வெளியே சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று 3 பேர் ஒரு பைக்கில் வேகமாக வந்து இளைஞர்முன் வந்து நிறுத்தினர்.

உண்மைலேயே இல்லீங்க
அறிமுகம் இல்லாதவர்கள் படாரென்று வண்டியை முரட்டுத்தனமாக நிறுத்தியதும் இந்த வட மாநில இளைஞர் பயந்துவிட்டார். ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு "என்ன வேண்டும்?" என்று இளைஞர் கேட்டார். அதற்குள் ஒருவன் கத்தியை காட்டி, "உன் பாக்கெட்ல இருக்கிற பணம், செல்போன் எல்லாத்தையும் எடுத்து கொடு" என்றான். "என்கிட்ட எதுவும் இல்லைங்க" என்றார் பாலேஸ்வரர். "ஏன்டா உன்னை மாதிரி எத்தனை பேரை பாத்திருப்போம்? எங்ககிட்டயே நடிக்கிறயா? எடுடா எல்லாத்தையும்" என்றனர். "உண்மையிலேயே இல்லை...ங்க..." என்றார் இளைஞர்.

கையில் பலமாக வெட்டு
இதனால் கோபடைந்த 3 வழிப்பறி பேர்வழிகளும், "ஏன்டா... இந்த காலத்தில கூலி வேலை செய்றவன்கூட ஆன்ட்ராய்டு போன் வெச்சிருக்கான். நீ எதுவும் இல்லாம வந்துட்டு, எங்ககிட்ட ஒண்ணுமே இல்லைன்னு வேற தைரியமா சொல்றியா? உனக்காக நாங்க பைக்குக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு, போலீஸ்காரங்க செக்கிங் எல்லாத்தையும் தாண்டி வந்தா, ஒண்ணுமில்லாம வந்து நிக்கறே? ஒண்ணுமில்லாம எதுக்குடா எல்லாரும் வெறுங்கைய வீசிட்டு வெளியே வர்றீங்க?.. நீட்டுடா உன் கையை" என்று சொல்லி வைத்திருந்த கத்தியால் ஒரே வெட்டு பலமாக தாக்கிவிட்டு பைக்கில் பறந்தனர். பாலேஸ்வரருக்கு கையில் ரத்தம் பொலபொலவென கொட்டியதும், சாலையில் சென்றோர் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

தீவிரம் தேவை
இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்திவந்தாலும், சென்னையில் சமீப காலமாக வழிப்பறிகள், கொள்ளைகள், வன்முறைகள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 வழிப்பறிகள் சென்னையில் நடந்துள்ளது. எனவே காவல்துறையினர் தங்களது வன்முறைகளை தடுக்கும் விவகாரத்தில் இன்னும் தீவிரத்தை கையிலெடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஆயுதங்களுடன் சில கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் தாங்கவில்லையென்றால், இதுபோன்ற வழிப்பறி கொள்ளையர்களின் அநியாயங்கள் இரவு நேரங்களில் தாங்க முடியவில்லை.

பாதுகாப்பு அவசியம்
குறிப்பாக பிசினஸ் ஸ்பாட் எனப்படும் தி.நகர், பாரிமுனை மற்றும் பரபரப்பு பகுதிகளான அண்ணாநகர், வடபழனி போன்ற பகுதிகளில் ரோந்து போலீசாரை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டியதும் முக்கியமான ஒன்று. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது இன்றியமையாத பொறுப்பும் கூட. சென்னையின் முக்கிய இடங்களுள் ஒன்றான அதுவும் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த தி.நகரிலேயே இதுபோன்ற அக்கிரமம் நடைபெற்றிருக்கிறது என்றால் சென்னையின் புறநகர் பகுதிகளை பற்றி யோசிக்க கூட முடியவில்லை.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications