For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசியை ஊடக அதிபர்கள், துணைவேந்தர்கள் சந்திப்பது வெட்ககேடு: குருமூர்த்தி பாய்ச்சல்

சசிகலாவை ஊடக அதிபர்கள், துணைவேந்தர்கள் சந்தித்ததற்கு எஸ். குருமூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது முட்டாள்தனமானது, வெட்கக் கேடானது என குருமூர்த்தி விமர்சித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவை ஊடக அதிபர்கள், துணைவேந்தர்கள் நேரில் சந்தித்தது முட்டாள்தனமானது, வெட்கக்கேடானது என துக்ளக் வார இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி சாடியுள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலராகவும் முதல்வராகவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால் அதிமுக தொண்டர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு லெட்டர்பேடு சங்க தலைவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவை சந்திக்க வைக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் ஊடகங்களின் அதிபர்கள், துணைவேந்தர்களும் சசிகலாவை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமமோகன் ராவ் சர்ச்சை

ராமமோகன் ராவ் சர்ச்சை

இதனிடையே தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராமமோகன் ராவ் நேற்று பேட்டியளித்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குருமூர்த்தி விமர்சனம்

குருமூர்த்தி விமர்சனம்

இது தொடர்பாக துக்ளக் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள எஸ். குருமூர்த்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் சோ மறைவுக்குப் பின்னர் துக்ளக் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார் எஸ். குருமூர்த்தி. சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார் குருமூர்த்தி.

அதிமுக தொண்டரா?

அதிமுக தொண்டரா?

ராமமோகன் ராவ் பேட்டி தொடர்பாக எஸ். குருமூர்த்தி ஊடகங்கள் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துகளின் தொகுப்பு:

ராமமோகன் ராவ் அதிமுக தொண்டர்போல, ஜெயலலிதாவின் ஆதரவாளராக பேசியுள்ளார். ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகியாக, மக்களுக்கு சேவையாற்றும் அதிகாரியாக பேசவில்லை.

மனநல மருத்துவரிடம்...

மனநல மருத்துவரிடம்...

ராமமோகன் ராவை மனநல மருத்துவர் பரிசோதிக்க வேண்டும். ராமமோகன் ராவ் அரசியல் சாசனப் பதவியை வகித்தவர். தம்மை 'அம்மாவின்' (ஜெயலலிதாவின்) வளர்ப்பு என கூறுகிறார். வளர்ப்பு மகன் சுதாகரன் இடத்தை கேட்கிறாரோ ராமமோகன் ராவ்?

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

முதல்வர் பன்னீர்செல்வம் தம்மை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு அரசியல் அழுத்தங்களுக்கும் இடம்கொடுக்காத வகையில் அமைச்சர்களை செயல்பட வைக்கும் முதல்வர்தான் தமிழகத்துக்கு தற்போதைய தேவை.

முட்டாள்தனமானது...

முட்டாள்தனமானது...

தமிழகத்தில் சில ஊடகங்கள் மவுனமாக்கப்பட்டுள்ளன. சசிகலாவை சில ஊடக அதிபர்கள் போய் சந்தித்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத முட்டாள்தனமான செயல், துணைவேந்தர்களும் சசிகலாவை சந்தித்து அதிமுக பொதுச்செயலராக கோரிக்கை விடுத்திருப்பது வெட்கக் கேடானது.

சுயநல கும்பல்

சுயநல கும்பல்

ஜெயலலிதாவைப் போல தம்மை காட்டிக் கொள்ள சசிகலா முயற்சிக்கிறார். ஆனால் அது தோல்வியில்தான் முடியும். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் சுயநல கும்பல். அந்த கும்பல் தங்களது சுயநலத்துக்காக எதையும் செய்யக் கூடியவர்கள்.

இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்.

English summary
Thuglak Editor Gurumurthy slammed Former Tamilnadu Chief Secretary Rama Mohan Rao for his interview. Gurumurthy said that Rama Mohan Rao has spoken like an ADMK worker and Jaya fan. Not like a civil servant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X