தாமிரபரணி தூய்மைப் பணி - பொது மக்களுக்கு நெல்லை கலெக்டர் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆறை தூய்மை படுத்த பொது மக்களை கலெக்டர் அழைத்துள்ளார். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நெல்லையில் உள்ள வற்றாத ஜூவநதியான தாமிரபரணியைத் தூய்மைப் படுத்தும் பணியில் மீண்டும் ஈடுபட மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்தூரி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார். அப்போது அவர் பேசுகையில், " தாமிரபரணியைத் தூய்மைப் படுத்தும் பணி முதல் கட்டமாக கருப்பாத் துறை முதல் வடக்கு பைபாஸ் பாலம் வரை 4.85 கிமீ தூரம் வரை நடந்தது.

 Tirunelveli district collector invites Public to Thamirabarani River cleaning

இதில் சுமார் 7 டன் குப்பை சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணியைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட தன்னர்வலர்கள், மாணவர்கள், மாணவிகள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தப் பணி பொது மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.

மேலும் ஆலோசனைக் கூட்டத்தில், தூய்மைப் பணியின் போது குறைபாடு காணப்பட்டால் அதை சரி செய்வதோடு சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது சுத்தம் செய்யப்பட்ட இடத்தை தொடர்ந்து பராமரித்து சுத்தமாக வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைப்பினர்களிடம் இருந்து கருத்துகள் கோரப்பட்டுள்ளது. குப்பைகளைத் தரம் பிரித்து எந்தெந்த இடத்தில் வைப்பது, எந்த இடத்தில் அதிக குப்பைகள் சேர்கிறது என்பதை கண்டறிவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவையான இடங்களில் கழிப்பறைகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய மாணவ, மாணவிகள், தன்னர்வலர்கள், பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tirunelveli district collector Sandeep Nanduri invites Public to Thamirabarani River cleaning work.
Please Wait while comments are loading...