திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - டாஸ்மாக் கடைகளுக்கு 10 நாள்கள் லீவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 2ஆம் தேதி மகா தீபத்திருவிழா நடக்கிறது. 10 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தீப திருவிழா பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக போற்றப்படுகிறது திருவண்ணாமலை.

Tiruvannamalai Deepam 2017 Tasmac closed on 10 days

டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்படுகிறது. மாலையில் மலைமீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவின் போது மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலையில் மருத்துவ வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. எனவே, திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மலையேற பக்தர்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலைப்பாதைகளும் மூடப்பட உள்ளன.

திருவிழாவில் 9 ஆயிரத்து 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வனத்துறை சார்பில் 250-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக தீபத்திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் 10 சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2 மதுக்கடைகளுக்கு 10 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பேருந்துநிலையம் மற்றும் தேனிமலையில் உள்ள மதுக்கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karthigai festival in Arunachaleshwar temple in Thiruvannamalai hills is very famous.This year flag hoisting on November 23 deepam festival on December 2nd.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற