சபாநாயகர் தனபால் நலமாக உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் தனபாலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TN assembly speaker admits in Apollo hospital

அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு தனபாலை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் தனபால் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், சபாநாயகர் தனபாலின் உடல்நிலை சீராக உள்ளது.

அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Assembly speaker Dhanapal admitted in Apollo hospital due to fever and stomach ache.
Please Wait while comments are loading...